பெரம்பலூர்: தி.மு.க. மகளிரணி சார்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம்

பெரம்பலூர்: தி.மு.க. மகளிரணி சார்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம்
X

பெரம்பலூரில் தி.மு.க. மகளிர் அணி சார்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.

பெரம்பலூர் மாவட்ட தி.மு.க. மகளிரணி சார்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.

தி.மு.க. மாவட்ட மகளிரணி சார்பில் இளம்பெண்கள் உறுப்பினர் சேர்க்கை முகாம் பெரம்பலூர் பாலக்கரையில் உள்ள தி.மு.க. கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது,

மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர், மகாதேவி ஜெயபால் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தி.மு.க. துணைப் பொதுச் செயலாளரும், நீலகிரி பாராளுமன்ற உறுப்பினருமான ஆ.இராசா மற்றும் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன், மாவட்ட ஊராட்சி குழு தலைவரும், தி.மு.க. மாவட்ட செயலாளருமான குன்னம் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அப்போது கட்சியின் வளர்ச்சி மற்றும் பெண்களுக்கான முக்கியத்துவம் குறித்து ஆ.ராசா தெரிவித்தார், இதனையடுத்து இளம் பெண்கள் உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றது. இதில் மாவட்டத்தில் பல்வேறு பகுதியில் இருந்து ஆர்வமுடன் இளம் பெண்கள் உறுப்பினர் படிவத்தில் கையெழுத்திட்டு தங்களை தி.மு.க-வில் உறுப்பினராக இணைத்துக் கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் ஒன்றிய கழக செயலாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, அண்ணாதுரை, நல்லதம்பி, மதியழகன், ஒன்றிய கழக பொறுப்பாளர்கள் ஜெகதீசன், சோமு.மதியழகன், ராஜேந்திரன் உள்ளிட்ட கட்சி பிரதிநிதிகள், தொண்டர்கள், பெண்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!