பெரம்பலூர் மாவட்ட அளவில் விடுதி மாணவ - மாணவிகளுக்கான விளையாட்டு போட்டி

பெரம்பலூர் மாவட்ட அளவில் விடுதி மாணவ - மாணவிகளுக்கான விளையாட்டு போட்டி
X

பெரம்பலூரில் மாவட்ட அளவில் விடுதி மாணவர்களுக்கான விளையாட்டு போட்டி நடந்தது.

பெரம்பலூர் மாவட்ட அளவில் விடுதி மாணவ - மாணவிகளுக்கான விளையாட்டு போட்டிகள் நடந்தது.

பெரம்பலூரில் உள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தில் பள்ளி , கல்லூரி விடுதி மாணவ - மாணவிகளுக்கான நடந்த 400 மீட்டர் ஓட்டப்பந்தயம் மற்றும் நீளம் தாண்டுதல் ஆகிய விளையாட்டு போட்டிகளையும் , இலக்கிய போட்டிகளான பேச்சு போட்டி , கட்டுரை போட்டியை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அலுவலர் ரமணகோபால் தொடங்கி வைத்தார் .

போட்டிகள் 6 முதல் 9 - ம் வகுப்பு வரையிலான மாணவ - மாணவிகளுக்கும் , 10 முதல் 12 - ம் வகுப்பு வரையிலான மாணவ - மாணவிகளுக்கும் , கல்லூரி மாணவ - மாணவிகளுக்கும் தனித்தனியாக நடைபெற்றது . இதில் மாவட்டத்தில் உள்ள 34 பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் பள்ளி , கல்லூரி விடுதிகளை சேர்ந்த சுமார் 400 - க்கும் மேற்பட்ட மாணவ - மாணவிகள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர் .

போட்டிகளில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ - மாணவிகளுக்கு வெகுமதியும் , பதக்கங்களும் , பாராட்டு சான்றிதழும் வழங்கப்பட்டது . வெற்றி பெற்ற மாணவ - மாணவிகள் மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்கவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது . இதற்கான ஏற்பாடுகளை விடுதி காப்பாளர்கள் , பயிற்சியாளர்கள் , உடற்கல்வி ஆசிரியர்கள் , பணியாளர்கள் செய்திருந்தனர் .

Tags

Next Story
கொடுமுடியில் விவசாயிகள் போராட்டம் - அதிகாரிகள் செயலாற்றாமல் இருந்ததா