பெரம்பலூர்: பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம்

பெரம்பலூர்: பல்வேறு  கோரிக்கையை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம்
X
கால நேரமின்றி வாட்ஸ்-அப் மூலம் குறுஞ்செய்திகள் பகிர்வையும் காணொளி கூட்டம் நடத்துவதையும் கைவிட வலியுறுத்தல்

பெரம்பலூர் மாவட்ட தலைநகரில் வளர்ச்சித் துறையில் திணிக்கப்படும் பணி நெருக்கடிகளை கைவிடக் கோரியும், மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தின் மாவட்ட தலைவர் இ.மரியதாஸ் தலைமை வகித்தார். அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் இளங்கோவன் கண்டன உரையாற்றினார் . ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை நிர்வாகிகள் சக்திவேல், செந்தில்நாதன், செல்லமணியன் , பூங்கொடி, கவிதா ,மற்றும் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் ப.குமரிஅனந்தன் , மருந்தாளுநர் சங்க மாநில தணிக்கையாளர் ராஜராஜன், தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு ஊழியர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் பழனிவேல்ராஜன், கூட்டுறவுத்துறை ஊழியர் சங்கத்தின் மாவட்ட நிர்வாகி விசுவநாதன், வருவாய்துறை அலுவலர் சங்க நிர்வாகிகள் பொன்னுதுரை, கருணாகரன், மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்கத்தின் மாவட்ட ,வட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இதில் வளர்ச்சித் திட்டங்களுக்கு இலக்கு நிர்ணயம் செய்வதை கைவிடக் கோரியும், புதிய திட்டங்களுக்கு பணியாளர்கள் நியமனம் செய்ய கோரியும், கால நேரமின்றி வாட்ஸ்அப் குறுஞ்செய்திகள் பகிர்வையும் மற்றும் காணொளி கூட்டம் நடத்துவதையும் கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்நிகழ்வில் ஐம்பதிற்கு மேற்பட்ட ஊழியர்கள் கலந்து கொண்டனர். பாரதிராஜா நன்றி கூறினார்.

Tags

Next Story
தினம் 1 ! வேகவைத்த முட்டை சாப்பிட்டால் உடம்புக்கு அவ்வளவு சத்துக்கள்  கிடைக்கும் ... வேறென்ன வேணும்...! | Egg benefits in tamil