/* */

பெரம்பலூர் மாவட்டம் குரும்பலூர் பேரூராட்சி தேர்தல் தொடர்பாக ஆட்சியர் ஆய்வு

வேட்பு மனுக்கள் மற்றும் பெறப்படும் படிவங்களை தேர்தல் ஆணைய இணையதளத்தில் உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படவேண்டும் என்றார்

HIGHLIGHTS

பெரம்பலூர் மாவட்டம் குரும்பலூர் பேரூராட்சி தேர்தல் தொடர்பாக ஆட்சியர் ஆய்வு
X

பெரம்பலூர் மாவட்டம் குரும்பலூர் பேரூராட்சியில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்துவது தொடர்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் , மாவட்ட தேர்தல் அலுவலர் ப.ஸ்ரீவெங்கட பிரியா நேரில் சென்று ஆய்வு செய்தார்.

பெரம்பலூர் மாவட்டம், குரும்பலூர் பேரூராட்சியில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்துவது தொடர்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் , மாவட்ட தேர்தல் அலுவலர் ப.ஸ்ரீவெங்கட பிரியா நேரில் சென்று ஆய்வு செய்தார்.

குரும்பலூர் பேரூராட்சி பகுதியில் மொத்தம் 11,137 வாக்காளர்கள் உள்ளனர். 7 வாக்குச்சாவடி மையங்களில் 15 வாக்குச்சாவடிகள் உள்ளது. இந்தப் பகுதிகளில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் முழுமையாக பின்பற்றப்படுகிறதா என்பதையும், பறக்கும் படைகள் மூலம் அங்கு முறையாக ஆய்வு செய்யப்பட்டு வருகிறதா என்பது குறித்தும் ஆய்வு செய்தார்..

மேலும் பேரூராட்சி அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர், பெரம்பலூர் வட்டாட்சியர் மற்றும் பேரூராட்சி அலுவலக பணியாளர்களிடம் தேர்தல் தொடர்பாக தமிழ்நாடு தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளை முழுமையாக பின்பற்றுவது குறித்தும், கொரோனா தொற்று ஏற்படாத வகையில் சமூக இடைவெளியை முழுமையாக பின்பற்றி தேர்தல் நடத்துவது தொடர்பாகவும், தேர்தல் பிரசாரத்தின் போது தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை முழுமையாக பின்பற்றுவது குறித்து ஆலோசனைகளை மேற்கொண்டார். மேலும், வேட்பு மனுக்கள் மற்றும் பெறப்படும் படிவங்கள் தமிழ்நாடு தேர்தல் ஆணைய இணையதளத்தில் உடனுக்குடன் முறையாக பதிவேற்றம் செய்யப்படவேண்டும் எனவும் அறிவுரை வழங்கினார்.

இந்த நிகழ்வில் பெரம்பலூர் வட்டாட்சியர் . கிருஷ்ணராஜ், குரும்பலூர் பேரூராட்சி செயல் அலுவலர் ஃ பேரூராட்சி தேர்தல் நடத்தும் அலுவலர் மெர்ஸி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Updated On: 1 Feb 2022 1:30 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    பிளஸ் 2 பொதுத்தேர்வில் 100 சதவீத தேர்ச்சி 14 அரசுப் பள்ளிகளுக்கு...
  2. இந்தியா
    ம‌க்களவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்த‌ல்: 93 தொகுதிகளி‌ல் 64% வா‌க்கு‌ப்பதிவு
  3. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  4. ஆரணி
    பட்டா பெயர் மாற்றம் செய்ய லஞ்சம் வாங்கிய விஏஓ கைது
  5. திருவண்ணாமலை
    மழை வேண்டி திருவாசகத்தை சுமந்தபடி கிரிவலம்
  6. கோவை மாநகர்
    திமுகவிற்கு எதிராக பேசியதால் போலீஸ் மூலம் பழிவாங்குகின்றனர்; சவுக்கு...
  7. லைஃப்ஸ்டைல்
    சகோதரிகள், இணை பிரியா தோழிகள்..!
  8. வானிலை
    தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை...
  9. லைஃப்ஸ்டைல்
    உங்கள் அன்புக்குரியவர்களுக்கான திருமண வாழ்த்துகள்
  10. லைஃப்ஸ்டைல்
    எதை விதைத்தோமோ அதையே அறுவடை செய்வோம்..!