பெரம்பலூர் கார் கவிழ்ந்து விபத்து - 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு

பெரம்பலூர் கார் கவிழ்ந்து விபத்து - 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு
X
விஜயகோபாலபுரம் அருகே அதிவேகமாக சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து ஏற்பட்ட விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

விஜயகோபாலபுரம் அருகே அதிவேகமாக சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து ஏற்பட்ட விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த இருவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

திண்டுக்கல் மாவட்டம் பழனி சேர்ந்தவர் கமலக்கண்ணன். இவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு லதா என்ற மனைவி உள்ளார். லதா வாலிபால் பயிற்சியாளராக பணியாற்றி வருகிறார்.

இந்த சூழலில் கமலக்கண்ணன் தனது குடும்பத்தினருடன் திண்டுக்கலில் இருந்து சென்னைக்கு வந்து கொண்டிருந்தார். கார் மூலம் சாலை வழியாக பயணம் மேற்கொள்ளப்பட்டதில் லதாவின் அம்மா வேம்பு , லதாவின் அண்ணன் ராமச்சந்திரன், கமலக்கண்ணன் சித்தி மணிமேகலை ஆகியோரும் உடன் பயணித்தனர்.

கமலக்கண்ணன் காரை ஓட்டி வந்த நிலையில் கார் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் அருகே உள்ள விஜயகோபலபுரம் பகுதியில் வந்து கொண்டிருந்தது அப்போது கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையில் இருந்த சென்டர் மீடியனில் மோதியது. இதனால் சுமார் 100 அடி தூரம் கார் உருண்டு சென்று விபத்துக்குள்ளாகியது.

இந்த விபத்தில் கமலக்கண்ணன் அவரது மனைவி லதாவின் அம்மா ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காயங்களுடன் லதாவின் அண்ணன் ராமச்சந்திரன், கமலக்கண்ணன் சித்தி மணிமேகலை ஆகியோர் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இது குறித்து சம்பவ இடத்திற்கு தகவலறிந்து வந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது