பெரம்பலூரில் முன்னாள் அதிமுக ஒன்றிய செயலாளர் கருப்பு பூஞ்சை நோய்க்கு பலி

பெரம்பலூரில் முன்னாள் அதிமுக ஒன்றிய செயலாளர் கருப்பு பூஞ்சை நோய்க்கு பலி
X

கருப்பு பூஞ்சை (பைல் படம்)

பெரம்பலூரில் அதிமுக ஒன்றிய செயலாளர் பொன் கலியபெருமாள் தனியார் மருத்துவமனையில் கருப்பு பூஞ்சை நோய்க்காக சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று சிசிச்சை பலன் இன்றி இறந்தார்.

பெரம்பலூரைசேர்ந்த பொன்கலியபெருமாள் அதிமுக முன்னாள் ஒன்றியசெயலாளர் ஆவார்.கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டு திருச்சி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் அவர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதனிடையே அருமடல் கிராமத்தை சேர்ந்த அய்யாசாமி என்பவர் கடந்த வாரம் சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டார்.அவருக்கு கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு இருந்ததால் திருச்சி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.அதே போல் குன்னத்தை சேர்ந்த லெனின் என்பவர் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டு திருச்சி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இவ்வாறு பெரம்பலூர் மாவட்டத்தில் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டு ஒருவர் உயிரிழந்துள்ளார்.இரண்டு பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இது பொதுமக்களிடையே நோய்தொற்று குறித்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!