பெரம்பலூர் ராசாவுக்கு நேரில் ஆறுதல் கூறிய காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ் அழகிரி

பெரம்பலூர் ராசாவுக்கு நேரில் ஆறுதல் கூறிய காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ் அழகிரி
X

பெரம்பலூரில் திமுக  துணைப் பொதுச் செயலாளர் ராசாவை நேரில் சந்தித்து காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி ஆறுதல் கூறினார்.

திமுக துணைப் பொதுச் செயலாளர் ராசாவின் மனைவி நேற்று முன்தினம் இறந்தார். நேற்று நல்லடக்கம் நடைபெற்றது. இன்று தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ். அழகிரி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

திமுக துணைப் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஆ. இராசாவின் மனைவி, பரமேஸ்வரி உடல்நலக்குறைவால் சிகிச்சை பலனின்றி மே 29-ம் தேதி இரவு உயிரிழந்தார்,

அவரது உடல் நேற்று சொந்த ஊரான பெரம்பலூர் மாவட்டம், வேலூர் கிராமத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது, இதனை தொடர்ந்த ஆ. இராசாவிடம் பல்வேறு கட்சி தலைவர்கள் திமுக அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் இரங்கல் தெரிவித்து ஆறுதல் சொல்லி வரும் வேலையில் இன்றுஇந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி, கட்சி நிர்வாகிகளுடன் பெரம்பலூர் பாலக்கரை அருகே உள்ள திமுக கட்சி அலுவலகத்தில் திமுக துணைப் பொதுச் செயலாளர் ஆ. இராசாவை நேரில் சந்தித்து அவரது மனைவி இறப்பு குறித்து விசாரித்து, ஆறுதல் கூறினர்.

இந்த சந்திப்பின்போது காங்கிரஸ் கட்சியின்மாநில துணைப் பொதுச் செயலாளர் தமிழ்செல்வன்,காங்கிரஸ் கட்சியின் தெலுங்கானா மாநில பொறுப்பாளர் ஜான் அசோக்,மற்றும் திமுக கட்சியை சார்ந்த தமிழக செய்தித்துறை அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதன், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ் . சிவசங்கர் ஆகியோர் உடன் இருந்தனர்..

இதனைத் தொடர்ந்து அமைச்சர்கள் தமிழ்நாடு வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்ஆர். ராமச்சந்திரன், தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் டாக்டர் எம். மதிவேந்தன், சுற்றுச்சூழல் நலத்துறை அமைச்சர் .மெய்யநாதன், கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த மதுரை பாராளமன்ற தொகுதி உறுப்பினர் மு.வெங்கடேசன்,ஆகியோர் அவரை இன்று நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.

Tags

Next Story
வாட்ஸ்அப், ஸ்கைப் மோசடிகள்: டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி விழிப்புணர்வு