பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

பெரம்பலூர் மாவட்ட  ஆட்சியர் அலுவலகத்தில்  மாற்றுத்திறனாளிகள் போராட்டம்
X

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள்

அரசு அறிவித்துள்ள படி தனியார்துறையில் 5% இடஒதுக்கீட்டை உடனடியாக அமல்படுத்த வேண்டும்

பெரம்பலூரில் மாற்றுத்திறனாளிகள் தனியார் துறையில் 5% இடஒதுக்கீட்டை அமல்படுத்த கோரி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாற்றுத்திறனாளிகள் மனுக்கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசு அறிவித்துள்ள படி தனியார்துறையில் 5% இடஒதுக்கீட்டை உடனடியாக அமல்படுத்த வேண்டும். .இடஒதுக்கீடு அமல்படுத்துவதற்கு பல மாவட்டங்களில் ஆலோசனை கூட்டம் கூட நடத்தவில்லை என குற்றம் சாட்டினர். மாற்றுத்திறனாளிகளை அரசு தங்களை வஞ்சிப்பதாகவும் முழக்கமிட்டனர். ஆட்சியர் அலுவலக கேட்டை மறைத்து தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.சுமார் 30 நிமிடங்களுக்கு மேலாக தர்ணா நடத்தினர். பின்னர் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலரை நேரில் சந்தித்து கோரிக்கை மனுவை கொடுத்தனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!