16 வருடங்களுக்குப் பிறகு புதுநடுவலூர் ஏரி நிரம்பியதை கொண்டாடிய மக்கள்

16 வருடங்களுக்குப் பிறகு புதுநடுவலூர்  ஏரி நிரம்பியதை கொண்டாடிய மக்கள்
X

புது நடுவலூர் ஏரி நிரம்பியது தனலட்சுமி சீனிவாசன் கல்வி குழுமத்தின் தலைவர் சீனிவாசன் மலர்தூவி தண்ணீரை வரவேற்றார்.

பொதுமக்கள் மிகுந்த உற்சாகத்துடன் பட்டாசு வெடித்தும் மலர் தூவியும் செல்பி புகைப்படங்கள் எடுத்து கொண்டாடி வருகின்றனர்

பெரம்பலூர் மாவட்டத்தில் பெய்து வரும் வடகிழக்கு பருவ மழையால் அத்தி அருவியிலிருந்து தண்ணீர் வருவதால் 16 வருடங்களுக்குப் பிறகு புது நடுவலூர் கிராமத்தில் உள்ள ஏரி நிரம்பி வழிகின்றது.

ஏற்கெனவே விசுவக்குடி கோட்டை நீர் தேக்கங்கள் நிரம்பி உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. மேலும் பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 73 ஒரு ஏரிகளில் 55 ஏரிகள் ஏற்கெனவே நிரம்பிய நிலை உள்ளது.

இதனை தொடர்ந்து, புது நடுவலூர் ஏரியும் நிரம்பி உபரி நீர் வெளியேறுகிறது. இந்த நிகழ்வில் பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் கல்வி குழுமத்தின் தலைவர் சீனிவாசன் பங்கேறேறு மலர்தூவி தண்ணீரை வரவேற்றார். பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வணங்கினார். பொதுமக்கள் மிகுந்த உற்சாகத்துடன் பட்டாசு வெடித்தும் மலர் தூவியும் செல்பி புகைப்படங்கள் எடுத்து கொண்டாடி வருகின்றனர். பச்சமலை பகுதியில் பலத்த மழை பெய்து வருவதால் மாவட்டத்தில் உள்ள கோரையாறு அருவி, எட்டெருமை பாழி அருவி, லாடபுரம் மயிலூற்று அருவி, புதுநடுவலூர் அத்தி அருவி ஆகியவற்றிலும் ஆர்ப்பரித்து தண்ணீர் கொட்டி வருகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!