பெரம்பலூர் மாவட்டத்தில் ஓய்வூதியதாரர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

பெரம்பலூர் மாவட்டத்தில்   ஓய்வூதியதாரர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
X

பெரம்பலூர் மாவட்ட ஓய்வூதியதாரர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீ வெங்கட பிரியா தலைமையில் நடந்தது.

பெரம்பலூர் மாவட்டத்தில் ஓய்வூதியதாரர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீவெங்கட பிரியா தலைமையில் நடந்தது.

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஓய்வூதியதாரர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சியர் ப. ஸ்ரீ வெங்கட பிரியா தலைமையில், சென்னை ஓய்வூதிய இயக்கக இணை இயக்குநர், சி.கமலநாதன் முன்னிலையில் நடைபெற்றது.

ஓய்வூதியதாரர்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் ஐம்பதிற்கும் மேற்பட்ட ஓய்வூதியர்கள் கலந்து கொண்டு தங்களுடைய கோரிக்கைகளை தெரிவித்தனர். மேலும் ஓய்வூதியதாரர்கள் தங்களுடைய கோரிக்கைகள் தொடர்பாக 17 மனுக்களை அளித்தனர். அதில் 4 மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டது. மேலும் 13 மனுக்களை சம்பந்தப்பட்ட அலுவலருக்கு அனுப்பி 15 தினங்களுக்குள் அவர்களுடைய கோரிக்கைகள் நிறைவேற்ற நடவடிக்கை மேற்கொள்ளவும், ஓய்வூதியதாரர்களின்; கோரிக்கைகளை துறை அலுவலர்கள் கனிவுடன் பரிசீலித்து உடன் நடவடிக்கை எடுக்கவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் ப.ஸ்ரீவெங்கட பிரியா தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் நா.அங்கையற்கண்ணி, ஓய்வூதிய இயக்கக முதுநிலை கணகாணிப்பாளர் ரிச்சர்ட் பாட்ரிக், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) சுப்பையா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(கணக்குகள்) பி.எஸ்.ஸ்ரீதர், உதவி இயக்குநர்(ஊராட்சிகள்) மு.பாரதிதாசன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(வளர்ச்சி) நாராயணன், மாவட்ட கருவூல அலுவலர் நா.பார்வதி, மற்றும் பல்வேலு துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Tags

Next Story
ai in future education