செட்டிகுளம் முருகன் கோயிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது பங்குனி உத்திர விழா

செட்டிகுளம் முருகன் கோயிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது பங்குனி உத்திர விழா
X

செட்டிகுளம் முருகன் கோவிலில் பங்குனி உத்திரவிழாவையொட்டி கொடி ஏற்றப்பட்டது.

Chettikulam Murugan Kovil-பெரம்பலூர் மாவட்டம் செட்டிகுளம் முருகன் கோயிலில் பங்குனி உத்திர விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

Chettikulam Murugan Kovil-பெரம்பலூர் மாவட்டம்,ஆலத்தூர் வட்டம் செட்டிக்குளம் கிராமத்தில் அமைந்துள்ளது தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில். இக்கோவிலில் இன்று பங்குனி உத்திரவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.கொடியேற்றத்தை முன்னிட்டு நேற்று (09.03.08)மாலை விநாயகர் வழிபாடு,வாஸ்து சாந்தி உள்ளிட்ட பூஜைகள் நடத்தப்பட்டன.

இன்று (10.03.18) அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து 9.00 மணியளவில் கொடிமரத்தில் கொடி ஏற்றப்பட்டது.இன்று முதல் வரும் 19ம் தேதி வரை 10 நாட்கள் திருவிழா நடைபெறுகிறது.இந்த நாட்களில் நாள்தோறும் காலை 10 மணிக்கு மலையில் உள்ள சுவாமி தண்டாயுதபாணிக்குச் சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனைகளும்,இரவு 9 மணிக்கு அலங்கரிக்கபட்ட பல்வேறு சிறப்பு வாகனங்களில் சுவாமி எழுந்தருளி வீதி உலா வருதலும் நடைபெறுகிறது.

திருவிழாவின் 7 ம் நாளான வரும் மார்ச் 16ம் தேதி முருகன்,வள்ளி மற்றும் தெய்வானை திருக்கல்யாணமும், 8ம் நாள் திருவிழாவான 17ம் தேதி ஏகாம்பரேஸ்வரர் மற்றும் தண்டாயுதபாணி சுவாமி கோயிலிலிருந்து அலங்கரிக்கபட்ட குதிரை,வெள்ளி மயில் வாகனங்களில் சுவாமி,அம்பாள் எழுந்தளி வீதி உலா வருதலும் நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் 18 ம் தேதி மாலை 4 மணியளவில் தொடங்கி 19ம் தேதி மாலை திருத்தேர் நிலையை வந்தடைகிறது.

பெரும்பாலான கோயில்கள் தேரோட்டம் காலையில் மட்டுமே நடைபெறும்.ஆனால்,இங்கு முதல் நாள் மாலையில் தொடங்கி அடுத்தநாள் மாலை வரை நடைபெறுவது சிறப்பு.தேரோட்டத்தை முன்னிட்டு சுகாதார ஏற்பாடுகள், பெரம்பலூர்,திருச்சி,துறையூர், அரியலூர் உள்ளிட்ட பல பகுதிகளிலிருந்து சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்படவுள்ளன.இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் செயலர் அலுவலர் ஜெயலதா,எழுத்தர் தண்டாணிதேசிகன்,கோயில் அலுவலக பணியாளர்கள் உள்ளிட்ட செய்திருந்தனர்.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
crop opportunities ai agriculture