பெரம்பலூர்: வி. களத்தூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை

பெரம்பலூர்: வி. களத்தூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
X

வி. களத்தூர் ஊராட்சி மன்ற அலுவலகம் (பைல் படம்).

பெரம்பலூர் மாவட்டம் வி. களத்தூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

பெரம்பலூர் மாவட்டம் வி. களத்தூர் ஊராட்சியில் மில்லத் நகர் மேற்கு பகுதியில் சுமார் 25 நாட்களாக குடிநீர் பிரச்சினை இருந்து வருகிறது. ஊராட்சி மன்றத் தலைவரிடம் பலமுறை புகார் தெரிவித்தும் எந்த ஒரு நடவடிக்கை எடுக்காமல் அலட்சிய போக்கை கண்டித்து அப்பகுதி மக்கள் பொதுமக்கள் ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதனால் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.இரண்டு நாட்களுக்குள் தண்ணீர் வரவில்லை என்றால் காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு பூட்டு போடப்போவதாக பொதுமக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!