பெரம்பலூர் மாவட்டத்தில் 109 கட்டிடங்கள் இடிக்கப்பட உள்ளன

பெரம்பலூர் மாவட்டத்தில்  109 கட்டிடங்கள் இடிக்கப்பட உள்ளன
X
பெரம்பலூர் மாவட்டத்தில், 109 கட்டிடங்கள் இடிக்கப்பட வேண்டியவை என்று, மாவட்ட ஆட்சியர் ஸ்ரீவெங்கட பிரியா தெரிவித்துள்ளார்.

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள தொடக்கப்பள்ளிகள், நடுநிலைப்பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள கட்டிடங்கள், வகுப்பறைகள் ,கழிப்பறைகள், சமையல் கூடங்கள், காம்பவுண்ட் சுவர்கள் உள்ளிட்ட அனைத்தும், பல்வேறு துறை அலுவலர்களைக் கொண்டு பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டுள்ளது

இதுவரை ஆய்வு செய்யப்பட்டதில் தொடக்க நடுநிலைப்பள்ளிகளில் 68 கட்டிடங்களும், உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள 41 கட்டிடங்களும் என மொத்தம் 109 கட்டிடங்கள் இடிக்கப்பட வேண்டியவை என கண்டறியப்பட்டுள்ளது. இடிக்கப்பட வேண்டிய பள்ளிகளில் வகுப்பறைகள் மோசமாக உள்ள பகுதிகளில், மாணவர்கள் செல்லாத வகையில் அவர்களுக்கு மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் ஸ்ரீ வெங்கட பிரியா தெரிவித்துள்ளார்.

Tags

Next Story