பெரம்பலூர்: ஊட்டம் தரும் காய்கறி தோட்டம் திட்டத்தை கலெக்டர் துவக்கினார்

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், முதலமைச்சரின் ஊட்டம் தரும் காய்கறி தோட்டம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த ஊட்டச்சத்து தளைகள் வழங்கும் திட்டத்தின் கீழ் மாடித்தோட்ட காய்கறி தொகுப்பு, 8 ஊட்டச்சத்து தோட்டம் செடி தொகுப்பு, 12 வகை காய்கறி விதை பொட்டலம் அடங்கிய தொகுப்பினை பயனாளிகளுக்கு மாவட்ட ஆட்சியர் ப.ஸ்ரீவெங்கட பிரியா வழங்கி துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் ம. பிரபாகரன் மற்றும் மாவட்ட ஊராட்சித் தலைவர் சி. ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
ஊரகப் பகுதிகளில் உள்ள விவசாயிகள், நலமற்ற விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் காய்கறி தோட்டம் அமைத்து தங்களின் அன்றாட உணவில் சத்தான காய்கறிகளை உண்ணும் வகையில் கத்தரி, வெண்டை, தக்காளி, தட்டைப்பயிறு, பீர்க்கன், புடலை, முருங்கை, புஸ்பீன்ஸ், சுரைக்காய், கொத்தவரை, பரங்கி, கீரைகள் அடங்கிய 12 வகை காய்கறி விதை தளைகள் உள்ளடக்கிய ரூ.60 மதிப்புடைய காய்கறி விதை தளைகள் ரூ.45 அரசு மானியத்துடன் ரூ.15க்கு சலுகை விலையில் 2,500 பயனாளிகளுக்கு அரசு மானியம் ரூ.1.12 லட்சம் மதிப்பீட்டில் வழங்கப்பட உள்ளது.
"உணவே மருந்து" என்ற கூற்றின்படி, மக்களின் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தி பல்வேறு நோயிலிருந்து பாதுகாத்துக்கொள்ள மூலிகைச் செடிகள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியுடைய பழங்களான பப்பாளி, எலுமிச்சை, முருங்கை கறிவேப்பிலை, திப்பிலி, கற்பூரவள்ளி, கற்றாழை மற்றும் புதினா ஆகிய 8 செடிகள் கொண்ட ஊட்டச்சத்து தளைகள் உள்ளடக்கிய ரூ.100 மதிப்புடைய ஊட்டச்சத்து தளைகள் ரூ.75 அரசு மானியத்துடன் ரூ.25க்கு சலுகை விலையில் 3,000 பயனாளிகளுக்கு (அரசு மானியம் ரூ.2,25,000 லட்சம் மதிப்பீட்டில்) வழங்கப்பட உள்ளது என மாவட்ட ஆட்சியர் ப. ஸ்ரீ வெங்கட பிரியா தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் பெரம்பலூர் ஒன்றியக் குழு தலைவர் மீனா அண்ணாதுரை, வேப்பந்தட்டை ஒன்றியக் குழு தலைவர் இராமலிங்கம், வேளாண்மைத் துறை இணை இயக்குநர் கருணாநிதி, தோட்டக்கலைத் துறை துணை இயக்குநர் மா.இந்திரா, உதவி இயக்குநர்கள் செல்வபிரியா (நடவுபொருட்கள்)விஜயகாண்டீபன், பா.நல்லமுத்து, சத்யஜோதி, மாவட்ட ஊராட்சி உறுப்பினர் மதியழகன், வட்டார தோட்டக்கலை அலுவலர்கள் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu