பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் பள்ளியில் தேசிய அறிவியல் தினம்

பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் பள்ளியில் தேசிய அறிவியல் தினம்
X

பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் பள்ளியில்  தேசிய அறிவியல் தினம் கொண்டாடப்பட்டது.

தனலட்சுமி சீனிவாசன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் தேசிய அறிவியல் தினமாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவினை தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக வேந்தரும்,தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவனங்களின் நிறுவனருமான சீனிவாசன் துவக்கி வைத்தார்.

அறிவியல் கண்காட்சியில் 300-க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் கலந்துகொண்டனர். கண்காட்சியின் துவக்கமாக பள்ளியின் முதல்வர் பிரேமலதா வரவேற்புரை நிகழ்த்தினார். பின்னர் நிறுவனத் தலைவர் சீனிவாசன் மாணவர்களை ஊக்கப்படுத்தியும்,பாராட்டியும் தலைமையுரை நிகழ்த்தினார்.அதன் பிறகு மாணவர்களின் அறிவியல் செயல்பாட்டினை கண்டுகளித்தார்.மாணவர்களின் படைப்புகளான "காற்றாலை மூலம் மின்சாரம் சேகரித்தல்,நகைப்பூட்டும் சோதனைகள்,மேலும் மனிதனின் இதயம் செயல்படும் விதம்,டெக்ஸ் விதி மாதிரிகள்,நீர் வெப்பமானி மற்றும் நியூக்லியர் பவர்பேங்க் காய்ல்,ஜே.சி.பி செயல் திறன்,எரிமலைகள், பல்வேறு வேதியியல் மாற்றங்களால் ஏற்படும் விளைவுகள்,மழைநீர் சேகரிப்பு,மைம்,நடனம் மற்றும் நீரின் முக்கியத்துவம் கருதி நீர் சேமிப்பு முறைகள் போன்ற பலவகையான மாணவர்களின் அறிவியல் திறமையை பாராட்டியதுடன் அவர்கள் வருங்கால அறிவியல் விஞ்ஞானிகளாக ஆகா வேண்டும் என்று வாழ்த்தினார்.

அவர்களின் திறமைகளைப் பாராட்டிப் பாராட்டுச் சான்றிதழையும் வழங்கினார். மேலும் மாணவர்களின் திறமையை வெளிக் கொணர்ந்த பள்ளி முதல்வர் மற்றும் ஆசிரியர்களையும் பாராட்டினார்.

Tags

Next Story
Weight Loss Tips In Tamil