தேசிய மக்கள் நீதிமன்ற விசாரணை : 712 வழக்குகளில் 3.63 கோடிக்கு தீர்வு

தேசிய மக்கள் நீதிமன்ற விசாரணை : 712 வழக்குகளில் 3.63 கோடிக்கு   தீர்வு
X

தேசிய மக்கள் நீதிமன்ற விசாரணை  பெரம்பலூர் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் இன்று நடைபெற்றது.

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை விசாரித்து தீர்வு காணப்பட்டது

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை சமரசமாக பேசி முடிப்பதற்கான தேசிய மக்கள் நீதிமன்றம் பெரம்பலூர் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் இன்று நடைபெற்றது.

மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவர் மற்றும் முதன்மை மாவட்ட நீதிபதி பல்கிஸ் தலைமையில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில், மகிளா நீதிமன்ற நீதிபதி கிரி, குடும்பநல நீதிபதி தனசேகரன், தலைமை நீதித்துறை நடுவர் மூர்த்தி, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் மற்றும் சார்பு நீதிபதி லதா, மாவட்ட உரிமையியல் நீதிபதி ரவிச்சந்திரன், கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி மகாலட்சுமி, நீதித்துறை நடுவர்கள் சுப்புலட்சுமி, சங்கீதாசேகர், முனிகுமார் மற்றும் குன்னம் தாலுகாவில் உள்ள மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிபதி சிவகாமசுந்தரி ஆகியோர் கொண்ட அமர்வானது, பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை விசாரித்து தீர்வு காணப்பட்டது,

அதன்படி, இதில் 65 வங்கி வழக்குகள், 54 மோட்டார் வாகன விபத்து வழக்குகள், 13 சிவில் வழக்குகள், 577 சிறு குற்ற வழக்குகள், 3 குடும்பநல வழக்கு என மொத்தம் 712 வழக்குகளில் 3 கோடியே 63 லட்சத்து 78 ஆயிரத்து 920 ரூபாய்க்கு தீர்வு காணப்பட்டது.

Tags

Next Story
ஏஐ ஆல் மனிதர்களுக்கு ஆபத்தா? உண்மை என்ன?