பெரம்பலூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் கார் மோதி ஒருவர் உயிரிழப்பு

பெரம்பலூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் கார் மோதி ஒருவர் உயிரிழப்பு
X

பெரம்பலூர் அருகே  தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.

பெரம்பலூர் அருகே திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கார் மோதியதால் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.

பெரம்பலூரை அடுத்துள்ள குரும்பலூர் அண்ணாநகர் பகுதியில் வசித்து வந்தவர் சீனிவாசன். இவர் ஆடு மேய்க்கும் தொழில் செய்து வந்தார். இவர் வல்லாபுரம் கிராமத்திலிருந்து சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலை வழியாக இருசக்கர வாகனத்தில் ஊருக்கு சென்றுகொண்டிருந்தார், அப்போது பெரம்பலூர் தண்ணீர் பந்தல் பகுதியில், சென்னையிலிருந்து திருச்சி நோக்கி அதிவேகமாக வந்து கொண்டிருந்த வாடகை கார், எதிர்பாராத விதமாக முன்னே சென்ற இரு சக்கர வாகனத்தின் மீது மோதியது.

இதில் இருசக்கர வாகனத்தை ஓட்டி சென்ற சீனிவாசன் தலையில் பலத்த அடிபட்டு சம்பவ இடத்திலேயே, உயிரிழந்தார். இதனையடுத்து சம்பவம் தெரிந்த சீனிவாசனின் உறவினர்கள், அப்பகுதியில் குவிந்தனர், மேலும் சாலை மறியலிலும் ஈடுபட்டனர். இதனால் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த பெரம்பலூர் போலீசார் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஆரோக்கிய பிரகாசம் மற்றும் காவல் ஆய்வாளர் செந்தில் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தி , கும்பலை கலைத்து சாலை போக்குவரத்தை சரி செய்தனர்.

மேலும் இறந்துபோன சீனிவாசனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து ஏற்படுத்திய காரை ஓட்டி வந்த பெரம்பலூர் அடுத்துள்ள கல்பாடி கிராமத்தைச் சேர்ந்த ஸ்ரீநாத் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

இச்சம்பவத்தால் தேசிய நெடுஞ்சாலையில் அரைமணி நேரம், போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!