தேசிய போட்டியில் வெற்றி பெற்ற பெரம்பலூர் சீனிவாசன் கல்லூரி மாணவர்கள்

தேசிய போட்டியில் வெற்றி பெற்ற பெரம்பலூர் சீனிவாசன் கல்லூரி மாணவர்கள்
X

போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சீனிவாசன் கல்லூரி தாளாளர் வாழ்த்து தெரிவித்தார்.

தேசிய போட்டியில் வெற்றி பெற்ற சீனிவாசன் கல்லூரி மாணவர்களுக்கு அதன் தாளாளர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பெரம்பலூர் சீனிவாசன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் தேசிய அளவில் கரூரில் நடைபெற்ற " பென்காக் சிலாட் " போட்டியில் கலந்து கொண்டார்கள் . கடந்த மார்ச் 05.03.2022 மற்றும் 06.03.2022 போன்ற தேதிகளில் கரூரில் " பென்காக் சிலாட் " தேசிய அளவில் தகுதிச் சுற்று போட்டி நடைபெற்றது .

200 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட இப்போட்டியில் இக்கல்லூரியைச் சேர்ந்த முதுநிலை முதலாம் ஆண்டு நுண்ணுயிரியல் துறை மாணவன் செ.முத்துகலைஞன் , இளம் அறிவியல் மூன்றாம் ஆண்டு வேதியியல் துறை மாணவன் இரா.ராகுல் போன்ற இரண்டு மாணவர்களும் தேர்வு செய்யப்பட்டார்கள் .

முதுஅறிவியல் முதலாம் ஆண்டு நுண்ணுயிரியல் துறை செ.முத்துக்கலைஞன் என்ற மாணவன் 40 கிலோ பிரிவில் கலந்து கொண்டு வெண்கலப்பதக்கத்தினையும் , இளம் அறிவியல் மூன்றாம் ஆண்டு வேதியியல் துறை இரா.ராகுல் என்ற மாணவன் 90 கிலோ பிரிவில் கலந்து கொண்டு வெள்ளிப் பதக்கத்தினையும் வென்றார்கள் .

அதற்காக தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தின் வேந்தர் அ.சீனிவாசன் மாணவர்களைப் பாராட்டினார் . சீனிவாசன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் நா.வெற்றிவேலன் , துணை முதல்வர் பேரா.கோ.இரவி உடனிருந்து வாழ்த்துக்களைத் தெரிவித்தார்கள் .

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி