பெரம்பலூர் மாவட்டத்தில் நாட்டு நலப்பணித் திட்ட முகாம்

பெரம்பலூர் மாவட்டத்தில் நாட்டு நலப்பணித் திட்ட முகாம்
X
பெரம்பலூர் அருகே நன்னை கிராமத்தில் என்.எஸ்.எஸ். முகாம் நடைபெற்றது.
பெரம்பலூர் மாவட்டத்தில் நாட்டு நலப்பணித் திட்ட முகாம் நடைபெற்றது.

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம், வேப்பூர் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவிகளின் நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாம் குன்னம் வட்டம் நன்னை கிராமத்தில் நடைபெற்று வருகிறது. இதில் நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாமின் ஏழாம் நாளில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் நடைபெற்றது. இதில் நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் கோ. சங்கரி அவர்கள் முன்னிலையில் நாட்டு நலப்பணி திட்ட மாணவிகள் நன்னை கிராம மக்களுக்கு வீடு வீடாக சென்று கொரோனா தடுப்பூசி பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

இதில் 50க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. மதிய உணவு இடைவேளைக்கு பிறகு நாட்டு நலப்பணி திட்ட முகாமின் நிறைவு விழா நடைபெற்றது. இதில் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் இரா. மீனா தலைமையுரையாற்றினார். ரவிச்சந்திரன் உதவி திட்ட அலுவலர், ஒருங்கிணைந்த பள்ளி கல்வி துறை புதுக்கோட்டை மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் உ.சின்னு கலந்து கொண்டு சிறப்புரை வழங்கினர். அதை தொடர்ந்து நாட்டு நலப்பணி திட்ட மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியின் நிறைவாக நாட்டு நலப்பணி திட்ட மாணவி கலையரசி நன்றியுரை வழங்கினார்.

Tags

Next Story