பெரம்பலூரில் மளிகை கடையின் பூட்டை உடைத்து மர்ம நபர் கைவரிசை

பெரம்பலூரில் மளிகை கடையின் பூட்டை உடைத்து மர்ம நபர் கைவரிசை
X

பெரம்பலூர் மளிகை கடையில் மர்ம நபர் பூட்டை உடைக்கும் சிசிடிவி கேமிரா பதிவு

பெரம்பலூரில் மளிகை கடையின் பூட்டை உடைத்து பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

பெரம்பலூர் வெள்ளாளர் தெருவை சேர்ந்தவர் கணேஷ் வயது 35 . இவர் எளம்பலூர் சாலையில் மளிகை கடை நடத்தி வருகிறார் .

நேற்று முன் தினம் இரவு வழக்கம் போல் வியாபாரம் முடிந்து கடையை பூட்டி விட்டு தனது வீட்டிற்கு சென்றார். காலையில் கணேஷ் கடையின் ஷட்டர் கதவு திறந்து கிடப்பதை கண்ட அருகே இருந்தவர்கள் அவருக்கு தகவல் தெரிவித்தனர் .

சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்தபோது கடையின் ஷட்டர் கதவின் பூட்டுகள் உடைக் கப்பட்டு திறந்து கிடந்தது தெரியவந்தது . மேலும் கடையின் உள்ளே சென்று பார்த்த போது கல்லாபெட்டி உடைக்கப்பட்டு , அதில் இருந்த ரூ 27ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது .

இதுசம்பவம் குறித்து பெரம்பலூர் காவல் நிலையத்தில் கணேஷ் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, விசாரணை நடத்தினர் . மேலும் , மோப்பநாய், மற்றும் கைரேகை நிபுணர்கள் வரவ ழைக்கப்பட்டு ஆய்வு செய்து தடயங்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட் டனர் .

அங்கிருந்த சிசிடிவி கேமராவில் திருடும் காட்சிகள் பதிவாகி உள்ளது .இது சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பணத்தை திருடி சென்ற மர்ம நபர் யார் என்பது குறித்து தேடி வருகின்றனர் . மளிகை கடையின் பூட்டு உடைக்கப்பட்டு பணம் திருட்டு போன சம்பவம் அப்பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது .

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்