பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் தாயும், சேயும் இறந்ததால் பரபரப்பு

பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் தாயும், சேயும் இறந்ததால் பரபரப்பு
X

பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனை (பைல்படம்).

பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் தாயும், சேயும் இறந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பெரம்பலூர் அருகே உள்ள சின்னபரவாய் கிராமத்தை சேர்ந்தவர் மருதுபாண்டி.இவரது மனைவி மகாலட்சுமி(19)நிறைமாத கர்ப்பிணியாக இருந்த இவர் பிரசவத்திற்காக குன்னம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டார்.அவரை பரிசோனை செய்த மருத்துவர்கள் மகாலட்சுமியை ,பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனையில் சேர்க்க பரிந்துரைத்துள்ளனர்.அதன்படி மகாலட்சுமி பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு அறுவைசிகிச்சை மூலம் பிரசவம் நடைபெற்றுள்ளது.வயிற்றில் இருந்த பெண்குழந்தை இறந்த நிலையில் எடுக்கப்பட்டது.பின்னர் சிறிது நேரத்தில் மகாலட்சுமியும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இது தொடர்பாக மகாலட்சுமியின் தாய் முத்துலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவ மனையில் பிரசவத்தின் போது தாயும் சேயும் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!