நாய்கள் கடித்ததால் உயிருக்கு போராடிய குரங்கை காப்பாற்றிய சமூக ஆர்வலர்

நாய்கள் கடித்ததால் உயிருக்கு போராடிய குரங்கை காப்பாற்றிய சமூக ஆர்வலர்
X

நாய்கள் கடித்ததில் காயம் அடைந்த குரங்கிற்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

நாய்கள் கடித்ததால் உயிருக்கு போராடிய குரங்கை காப்பாற்றிய சமூக ஆர்வலருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் ஒதியம் சமத்துவபுரம் கிராமத்தில் கடந்த இரு தினங்களுக்கு முன் நாய்கள் கூட்டமாக சேர்ந்து குரங்கு ஒன்றை கழுத்து கை பகுதிகளில் கடித்ததில் மரத்தில் தாவ கூட முடியாமல் மயங்கி விழுந்தது. உயிருக்கு போராடிய நிலையில் இருந்த குரங்கை அந்த பகுதியை சேர்ந்த பிரபு என்னும் ஓட்டுநர் தொழில் செய்து வரும் சமூக ஆர்வலர் முதலுதவி செய்யும் வகையில் தனது மூச்சை கொடுத்து காப்பாற்றிய சம்பவம் அவருக்கு பாராட்டை பெற்று தந்துள்ளது.

சற்றும் யோசிக்காமல் உடனே முதலுதவி செய்து பெரம்பலூர் கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை செய்யப்பட்டு குரங்கு வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. எனினும் அடுத்த நாள் குரங்கு இறந்தது தனக்கு வருத்தம் அளிப்பதாக பிரபு கூறினார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!