வேப்பூரில் புதிதாக அமைக்கப்பட்ட மின்மாற்றியை துவக்கி வைத்த அமைச்சர்
வேப்பூரில் புதிய டிரான்ஸ்பார்மரை துவக்கி வைத்த அமைச்சர் எஸ் எஸ் சிவசங்கர்.
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள வேப்பூரில் புதிய மின்மாற்றியை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர், நேற்று துவக்கி வைத்தார்.
குறைந்த வோல்டேஜ் மின்சாரம் மட்டும் வருவதால் இதனால் வீடுகளில் உள்ள மின் விளக்குகள், மின்விசிறிகள், டிவி உள்ளிட்ட எந்த ஒரு மின்சார பொருளும் இயக்க முடியவில்லை. அதேபோல் விவசாய நிலங்களில் உள்ள மின்மோட்டாரையும் இயக்க முடியவில்லை. புதிய மின் மாற்றிகள் அமைக்கப்பட வேண்டும் என்று விவாசாயிகளின் கோரிக்கையின் பேரில் குன்னம் சட்டமன்ற தொகுதியில் 55 புதிய மின்மாற்றிகள் அமைக்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
அதன் பேரில் 63கிலோ வாட் கொண்ட புதிய டிரான்ஸ்பார்மர் ரூ.6,62,830 லட்சம் செலவில் புதிய மின்மாற்றி வேப்பூரில் அமைக்கப்பட்டது. அதனை தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர், நேற்று துவக்கி வைத்தார். இதே போல கல்லை, மழவராயன்நல்லூர், காருகுடி, அந்தூர், ஆகிய கிராமங்களிலும் புதிதாக அமைக்கப்பட்ட டிரான்பார்ம்களை அமைச்சர் சிவசங்கர் நேற்று தொடங்கிவைத்தார் என்பது குறிப்பிடதக்கது.
இந்நிகழ்ச்சியில் மின்வாரிய செயற்பொறியாளர் ராஜேந்திரவிஜய், உதவி செயற்பொறியாளர் கார்த்திகேயன், உதவி மின் பொறியாளர் லதா,வேப்பூர் ஒன்றிய சேர்மன் பிரபா செல்லபிள்ளை, தெற்கு ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன், ஓலைப்பாடி ஊராட்சி மன்ற தலைவர் தனம்பெரியசாமி, மாநில தலமை பொதுகுழு உறுப்பினர் வேட்டகுடி ராஜேந்திரன், முன்னால் சேர்மேன் நீலமேகம், ஒன்றிய இளைஞர் அணிசெயலாளர், பிராகரன், உட்பட கட்சி நிர்வாகிகள் மின்சார வாரிய களப்பணியாளர்கள் ஊர் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu