பெரம்பலூரில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் கருணை இல்லத்தில் ஒப்படைப்பு

பெரம்பலூரில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் கருணை இல்லத்தில் ஒப்படைப்பு
X
பெரம்பலூரில் மன நலம் பாதிக்கப்பட்டு சுற்றிதிரிந்த பெண்ணை போலீசார் மீட்டனர்.
பெரம்பலூரில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் போலீசாரால் மீட்கப்பட்டு கருணை இல்லத்தில் ஒப்படைக்கப்பட்டார்.

பெரம்பலூர் மாவட்டம் புதிய பேருந்து நிலையம் அருகில் தனியாக நின்று கொண்டிருந்த மனநலம் பாதிக்கப்பட்ட சுமார் 50 வயது மதிக்கத்தக்க மாரியாயி என்ற பெண்மணியை பத்திரமாக மீட்ட அனைத்து மகளிர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் விஜயலட்சுமி, காவலர் ஸ்ரீதர் மற்றும் ஒருங்கிணைந்த சேவை மைய நிர்வாகி கீதா ஆகியோர் மேற்படி பெண்ணை பெரம்பலூர் வேலா கருணை இல்லத்தில் பாதுகாப்பான முறையில் ஒப்படைத்தனர். இச்செயலுக்கு பொதுமக்கள் மற்றும் காவல்துறையினர் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!