மனநல பாதிப்பால் 5 ஆண்டுக்கு முன் மீட்கப்பட்டவர் உறவினரிடம் ஒப்படைப்பு

மனநல பாதிப்பால் 5 ஆண்டுக்கு முன் மீட்கப்பட்டவர் உறவினரிடம்  ஒப்படைப்பு
X

பெரம்பலூர் அருகே மன நலம் பாதிப்பால்  ஐந்தாண்டுக்கு முன் மீட்கப்பட்டவர் மும்பையில் இருந்து வந்த உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டார்.

பெரம்பலூர் மாவட்டத்தில் மனநல பாதிப்பால் 5 ஆண்டுக்கு முன் மீட்கப்பட்டவர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டார்.

பெரம்பலூர் தீரன் நகர் அருகே இயங்கி வரும் வேலா கருணை இல்லம், மனநலம் பாதிக்கப்பட்டோருக்கான மறுவாழ்வு மையமாக செயல்பட்டு வருகிறது. இம் மையத்தில், சாலையோரம் சுற்றித் திரியும் மனநலம் பாதிக்கப்பட்ட நபர்களை அழைத்து அவர்களுக்கு சிகிச்சை அளித்து உரியவர்களிடம் ஒப்படைக்கும் மகத்தான பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு பெரம்பலூர் துறைமங்கலம் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் சாலையோரம் சுற்றித் திரிந்த மனநலம் பாதிக்கப்பட்ட நபரை அழைத்து, அவருக்கு சிகிச்சை அளித்து பாதுகாத்து வந்த நிலையில் அவர் குணமடைந்த போது அவர் பெயர் அப்சர் அலி என்கிற அர்சத் அலிகான் என்பதும் மகாராஷ்டிரா மாநிலம் மும்பை குர்லா பகுதியை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது.

இதுதொடர்பாக அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவித்ததன் பேரில், அக்டோபர் இன்று அப்சர் அலிகான் என்கிற அர்சத் அலிகான்கான் தாய் சுக்கிரா பீ மற்றும் தம்பி அமீர் ஆகியோரிடம் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீ வெங்கட பிரியா முன்னிலையில் ஒப்படைக்கப்பட்டனர்.

இந்நிகழ்வின் போது. மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் பொம்மி, வேலா கருணை இல்ல நிர்வாகி அனிதாஅருண் சமூகப் பணியாளர் பிரியங்கா ஆகியோர் உடனிருந்தனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!