பெரம்பலூரில் டிச.5ம் தேதி மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம்
பெரம்பலூரில் மாபெரும் தனியார்த்துறை வேலைவாய்ப்பு முகாம் 05.12.2021 அன்று நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியர் ப. ஸ்ரீ வெங்கட பிரியா தெரிவித்துள்ளார்.
மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், பெரம்பலூர் மற்றும் மாவட்ட நிர்வாகம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
இவ்வேலைவாய்ப்பு முகாமில் பெரம்பலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள எம்.ஆர்.எப் நிறுவனம் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட சென்னை, காஞ்சிபுரம், ஒசூர், கோயம்பத்தூர், திருப்பூர், மதுரை, திருச்சி மற்றும் பெரம்பலூர் பகுதிகளில் அமைந்துள்ள முன்னணி நிறுவனங்கள் கலந்துகொண்டு 15000-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கு டிரைவர், தையல், 8-ஆம்வகுப்பு முதல் பட்டபடிப்பு வரை, ஐ.டி.ஐ, டிப்ளமோ, அக்ரி, koநர்சிங், பார்மசி, பி.இ. பி.டெக்., ஹோட்டல் மேனேஜ்மெண்ட் மற்றும் ஆசிரியர் கல்வித் தகுதியுடையோர்களை தேர்வு செய்யவுள்ளனர்.
மேலும் தமிழ்நாடு அரசின் அயல்நாட்டு நிறுவனத்தின் பதிவு வழிகாட்டுதல்கள், தொழில் பழகுநர் மற்றும் குறுகியகால திறன் பயிற்சிக்கு வழிகாட்டுதல் மற்றும் சுயதொழில் மற்றும் கடன் உதவி தொடர்பான ஆலோசனைகளும் வழங்கப்பட உள்ளது. இதில் கலந்துகொள்ள விருப்பம் உள்ளவர்கள் ஆதார் எண், பயோடேட்டா, கல்விச் சான்றிதழ்களுடன் 05.12.2021 ஞாயிற்றுக்கிழமை காலை 8-மணி முதல் 3 மணி வரை பெரம்பலூர் நகராட்சியில் உள்ள ரோவர் பள்ளி வளாகத்தில் நடைபெறும் முகாமில் கலந்துகொள்ளலாம்.
இம்முகாமில் கலந்துக் கொள்ள விருப்பமுள்ளவர்கள் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் Candidate Login-ல் தங்களது விவரங்கள் பதிவு செய்துக்கொள்ளலாம். இவ்வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொள்வதற்கு அனுமதி இலவசம் என மாவட்ட ஆட்சியர் ப. ஸ்ரீ வெங்கட பிரியா தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu