மொழிப்போர் தியாகிகள் தினம்: அதிமுக சார்பில் மௌன அஞ்சலி

மொழிப்போர் தியாகிகள் தினம்: அதிமுக சார்பில் மௌன அஞ்சலி
X

அதிமுக சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கு மாவட்ட கழக அலுவலகம் முன்பு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

மொழிப்போர் தியாகிகள் தினத்தை முன்னிட்டு அதிமுக சார்பில் மலர் தூவி மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு உயிர் நீத்த மொழிப்போர் வீரர்களுக்கு தமிழகம் முழுவதும் இன்று வீர வணக்கம் செலுத்தப்பட்டு வருகிறது. அதன்படி அதிமுக சார்பில் மாவட்ட கழக அலுவலகம் முன்பு மாவட்ட மாணவரணி செயலாளர் தமிழ்ச்செல்வன் தலைமையில் உயிர்நீத்த மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது. இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. நிகழ்வில் அதிமுக நகர கழக செயலாளர் ராஜபூபதி, ஒன்றிய செயலாளர்கள் செல்வகுமார், கர்ணன், உதயம் ரமேஷ் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!