பெரம்பலூரில் மதுவினால் ஏற்படும் பாதிப்பு குறித்து விழிப்புணர்வு

பெரம்பலூரில் மதுவினால் ஏற்படும் பாதிப்பு குறித்து விழிப்புணர்வு
X

பெரம்பலூர் பாலக்கரையில், பொது மக்களிடம் மதுவினால் ஏற்படும் பாதிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல்துறையினர்.

பெரம்பலூரில் மதுவினால் ஏற்படும் பாதிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச.மணி உத்தரவின்படி பெரம்பலூர் மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு ஆய்வாளர் (பொ) வாணி மற்றும் அவரது குழுவினர், பெரம்பலூர் பாலக்கரையில் இருந்த பொதுமக்களிடம் மது அருந்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.

மேலும், மது விற்பது, காய்ச்சுவது, ஊரல் போடுவது போன்ற குற்றங்களில் எவரேனும் ஈடுபட்டால், அது குறித்த தகவலை 10581 என்ற இலவச எண்ணிற்கு அழைக்கலாம் அல்லது மாவட்ட காவல் அலுவலக எண்ணிற்கு 9498100690 தகவல் தெரிவிக்கலாம் இரகசியம் காக்கப்படும் என்று கூறியும், பொது மக்களிடம் விழிப்புணர்வு குறித்து துண்டு பிரசுரங்களை வழங்கினர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!