பெரம்பலூரில் சட்டப்பணிகள் ஆணைக்குழு செயல்பாடுகள் குறித்த கண்காட்சி

பெரம்பலூரில் நடந்த சட்ட விழிப்புணர்வு கண்காட்சியில் பங்கேற்ற மாணவி ஒருவருக்கு நீதிபதி கையேடு வழங்கினார்.
பெரம்பலூர் மாவட்டத்தில் தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் 25 - வது ஆண்டு வெள்ளி விழா நிறைவையொட்டி அனைத்து கிராமங்களிலும் சட்ட விழிப்புணர்வு முகாம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது . அந்த வகையில் சட்ட சேவைகள் தினத்தை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்ட சட் டப்பணிகள் ஆணைக்குழு வின் செயல்பாடுகள் , சேவைகள் மற்றும் சாதனைகள் குறித்த கண்காட்சி பெரம்பலூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. கண்காட்சியை முதன்மை மாவட்ட நீதிபதி பல்கீஸ் தொடங்கி வைத்து பேசினார்.
இதில் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீவெங்கடபிரியா மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
விழாவில் நீதிபதி பல்கீஸ் பேசுகையில் நீதிமன்றங்களில் வழக்குகள் தொடராமலே மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழு மூலம் பொதுமக்களுக் கான பிரச்சினைகள் சமரச முறையில் தீர்த்து வைக்கப்ப டுகிறது . சட்டம் தனிமனித வாழ்க்கையில் சுய ஒழுக்கத்தை கற்பிக்கிறது . நமது நாட்டில் இயற்றப்படும் சட் டம்உங்கள் அனைவரும் தெரிந்திருக்க வேண்டும் என்ற நோக்கில் பெரம்பலூர் மாவட்டத்தில் பல குழுக்களாக செயல்பட்டு சட்ட விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றார்.
இதில் வழக்கறிஞர் சங்க தலைவர் வள்ளுவன் நம்பி மற்றும் அட்வகேட் அசோசியேசன் தலைவர் திருநாவுக்கரசு ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள் . எஸ்.சி.எஸ்.டி. சிறப்பு நீதிமன்ற அமர்வு நீதி பதி மலர்விழி , நிரந்தர மக்கள் நீதிமன்றத்தின் தலைவர் பொறுப்பில் உள்ள மற்றும் மாவட்ட மகிளா நீதிமன்ற நீதிபதி கிரி , குடும்ப நல நீதிமன்றத்தின் நீதிபதி தனசேகரன் , சார்பு நீதிபதி ஷகிலா , நீதித்துறை நடுவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர் .
கல்லூரி மாணவர்களிடையே மாவட்ட அளவிலான சட்ட விழிப்புணர்வு . குறித்த ஓவியப்போட்டி நடத்தப்பட்டு அதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கும் , போட்டியில் கலந்து கொண்ட மாணவர்களுக்கும் பரிசும் , சான்றிதழும் வழங்கப் பட்டன . சிலம்ப கலைகளின் மூலம் சட்ட விழிப்புணர்வு ஏற்படுத்திய சிலம்பாட்ட பயிற்றுனர் , சிலம்ப கலைஞர் களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது .
நிகழ்ச்சியில் முன்னதாக மாவட்ட சட் டப்பணிகள் ஆணைக்குழு செயலாளரும் , சார்பு நீதிபதியுமான லதா வரவேற்றார் . நிகழ்ச்சிகளை இளநிலை நிர்வாக உதவியாளர் சக்கரபாணி தொகுத்து வழங்கினார் . முடிவில் முதன்மை குற்றவியல் நீதிபதி மூர்த்தி நன்றி கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu