பெரம்பலூரில் சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் சட்ட விழிப்புணர்வு பேரணி

பெரம்பலூரில் சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் சட்ட விழிப்புணர்வு பேரணி
X

பெரம்பலூரில் சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் சட்ட விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

பெரம்பலூரில் சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் சட்ட விழிப்புணர்வு பேரணி, முதன்மை மாவட்ட நீதிபதி துவக்கி வைத்தார்.

பெரம்பலூரில் சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் சட்ட விழிப்புணர்வு பேரணி, முதன்மை மாவட்ட நீதிபதி துவக்கி வைத்தார்.

தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு வழிகாட்டுதலின் பேரில் , இந்திய நாடு விடுதலை பெற்று 75 ஆண்டுகள் நிறைவடைதையொட்டி பவளவிழாவாகவும் , தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு தொடங்கப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி வெள்ளி விழாவாகவும் 2021 அக்டோபர் 2 முதல் 2021 நவம்பர் 14 வரை ( Pan - India Awareness )மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவர் பல்கீஸ் அவர்களின் தலைமையில் பெரம்பலூர் மாவட்டத்தில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

மேலும் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து பொதுமக்கள் மனுவின் அடிப்படையில் பலன்களை வழங்கியும் , மாபெரும் கண்காட்சியின் மூலமும் , பேரணி மூலமும் நேரடியாக மக்களை அணுகியும் , பல்வேறு வகையில் நடைபெற்ற சட்ட விழிப்புணர்வு நிகழ்வு, நவம்பர் 14 நிறைவு நாளை முன்னிட்டு , குழந்தைகள் தினத்தில் சட்ட விழிப்புணர்வு பேரணியை முதன்மை மாவட்ட நீதிபதியும் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவருமான பல்கீஸ் கொடியசைத்து துவக்கி வைத்தார். பள்ளி மாணவர்களின் இந்த விழிப்புணர்வு பேரணியில், சட்ட விழுப்புணர்வு வாசகங்களை முழக்கமிட்டுக் கொண்டு, பெரம்பலூர் பாலக்கரை மாவட்ட ஆட்சியரக வளைவிலிருந்து தொடங்கி புதிய பேருந்து நிலையம் வழியாக சென்று மீண்டும் மாவட்ட ஆட்சியரக வளைவில் சட்ட விழிப்புணர்வு பேரணி நிறைவடைந்ததது.

பெரம்பலூர் மாவட்டத்தில் அக்டோபர் 2 லிருந்து நவம்பர் 14 இன்று வரை தொடர்ந்து சட்ட விழிப்புணர்வு முகாமிற்கு ஒத்துழைப்பு வழங்கிய நீதிபதிகள், வழக்கறிஞர், மாவட்ட நிர்வாகம், காவல் துறை, சட்ட தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள் மற்றும் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செய்திகளை பொதுமக்களிடத்தில் தொடர்ந்து கொண்டு சேர்க்கும் ஊடகத்துறையினர், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பாக நன்றியினை தெரிவித்துக்கொண்டார் .

இந்த சட்ட விழிப்புணர்வு பேரணியில் நிரந்தர மக்கள் நீதிமன்றத்தின் பொருப்பு தலைவர் மற்றும் மகிளா நீதிமன்றம் மாவட்ட நீதிபதி , கிரி , முதன்மை குற்றவியல் நீதித்துறை நடுவர் மூர்த்தி , பெரம்பலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளரும் சார்பு நீதிபதியுமான லதா , சார்பு நீதிபதி ஷகிலா, முதன்மை மாவட்ட உரிமையியல்ரவிச்சந்திரன், குன்னம் மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்தறை நடுவர் சிவகாமசுந்தரி, வழக்கறிஞர் சங்க செயலாளர் சுந்தரராஜன், அட்வகேட் அசோசியேசன் தலைவர் திருநாவுக்கரசு மற்றும் சங்கங்களின் வழக்கறிஞர்கள், மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர் அருள்செல்வி, நீதிமன்ற பணியாளர்கள், காவல் துறையினர், மற்றும் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டார்கள் .

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்