/* */

அரசு கல்லூரி கவுரவ விரிவுரையாளர்கள் இரவு பகலாக உள்ளிருப்பு போராட்டம்

பெரம்பலூரில், அரசு கல்லூரியின் அனைத்து தற்காலிக கவுரவ விரிவுரையாளர்கள், இரவு பகலாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

அரசு கல்லூரி கவுரவ விரிவுரையாளர்கள் இரவு பகலாக உள்ளிருப்பு போராட்டம்
X

இரவிலும் உள்ளிருப்பு போராட்டத்தை தொடர்ந்த, பெரம்பலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கவுரவ விரிவுரையாளர்கள்.

பெரம்பலூர் அடுத்துள்ள குரும்பலூரில், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி உள்ளது. இங்கு பணிபுரியும் தற்காலிக கவுரவ அனைத்து விரிவுரையாளர்கள், அனைத்து தற்காலிக மணிநேர விரிவுரையாளர்கள், அனைத்து தற்காலிக அலுவலகப் பணியாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த ஜூன், அக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதம் வரை வழங்கப்படாமலிருக்கும், அரசால் உயர்த்தப்பட்ட ஊதியம் ரூபாய்.20,000, தொகையை நிலுவையின்றி வழங்கிடக் வேண்டும்;01.01.2020 முதல், இன்று வரையிலான 24 மாதங்களுக்கான நிலுவைத் தொகையினை வழங்க வேண்டும்; அனைத்து தற்காலிக பணியாளர்களுக்கும் பணிப் பாதுகாப்பு தர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி, நேற்று காலை கல்லூரி வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தை தொடங்கினர்.

இப்போராட்டம், நேற்றிரவும் நீடித்தது. இந்த உள்ளிருப்பு போராட்டத்தில்,அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் அனைத்து தற்காலிக கவுரவ விரிவுரையாளர்கள், அனைத்து தற்காலிக மணிநேர விரிவுரையாளர்கள், அனைத்து தற்காலிக அலுவலகப் பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 8 Jan 2022 12:45 AM GMT

Related News