பொது மக்களின் நிலம் தொடர்பான பிரச்சினைகளை தீர்க்க சிறப்பு முகாம்

பொது மக்களின் நிலம் தொடர்பான பிரச்சினைகளை தீர்க்க சிறப்பு முகாம்
X

நிலம் தொடர்பான பிரச்சினைகளை தீர்க்க பெரம்பலூர் மாவட்டத்தில் சிறப்பு முகாம் நடைபெற்றது.

பெரம்பலூர் மாவட்டத்தில் பொது மக்களின் நிலம் தொடர்பான பிரச்சினைகளை தீர்க்க சிறப்பு முகாம் நடைபெற்றது.

பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச.மணி உத்தரவின்படி பெரம்பலூர் மாவட்ட காவல்துறை மற்றும் குன்னம் வட்ட வருவாய்துறையினர் இணைந்து குன்னம் வட்டாட்சியர் அலுவலகத்தில் பொது மக்களின் நிலம் தொடர்பான பிரச்சினைகளை தீர்க்க மனு விசாரணை முகாம் நடைபெற்றது.

மேலும் மனு விசாரணை முகாமில் பெரம்பலூர் மாவட்ட நில மோசடி தடுப்பு பிரிவு காவல் உதவி ஆய்வாளர் முகமது அபுபக்கர் மற்றும் தலைமைக் காவலர்களும், சமூக நல வட்டாட்சியர் துரைராஜ் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.

இந்த மனு விசாரணை முகாமில் மொத்தம் மனுக்கள் பெறப்பட்டு அவற்றிற்கு உடனடியாக தீர்வு காணப்பட்டது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!