பெரம்பலூர்: பொது மக்களின் நிலம் தொடர்பான பிரச்சினை தீர்க்க மனு முகாம்

பெரம்பலூர்: பொது மக்களின் நிலம் தொடர்பான பிரச்சினை தீர்க்க மனு முகாம்
X

பெரம்பலூர் மாவட்டத்தில்  பொதுமக்களின் நிலம் தொடர்பான பிரச்சினைகளை தீர்க்க மனு முகாம் நடத்தப்பட்டது.

பெரம்பலூர் மாவட்டத்தில் பொது மக்களின் நிலம் தொடர்பான பிரச்சினைகளை தீர்க்க மனு முகாம் நடத்தப்பட்டது.

பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச.மணி உத்தரவின்படி பெரம்பலூர் மாவட்ட காவல்துறை மற்றும் ஆலத்தூர் வட்ட வருவாய்துறையினர் இணைந்து ஆலத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் பொது மக்களின் நிலம் தொடர்பான பிரச்சினைகளை தீர்க்க மனு விசாரணை முகாம் நடைபெற்றது.

மேலும் மனு விசாரணை முகாமில் பெரம்பலூர் மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு காவல் ஆய்வாளர் ரஞ்சனா, காவல் உதவி ஆய்வாளர் முகமது அபுபக்கர் மற்றும் தலைமைக் காவலர்களும், ஆலத்தூர் வருவாய் வட்டாட்சியர் முத்துகுமரன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இந்த மனு விசாரணை முகாமில் மொத்தம் 14 மனுக்கள் பெறப்பட்டு அவற்றில் 13 மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டது.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்