கூட்டுக் குடிநீர் திட்டத்தை எதிர்த்து போராட்டம்

கூட்டுக் குடிநீர் திட்டத்தை எதிர்த்து போராட்டம்
X

பெரம்பலூர் மாவட்டம் கீழக்குடிக்காடு கிராமத்தில் உள்ள வெள்ளாற்றில் கூட்டு குடிநீர் திட்டத்திற்காக ஆழ்குழாய் அமைக்கும் பணி அரசு அனுமதியோடு நடைபெற்றது.

இந்த திட்டத்தின் மூலம் சுமார் 50 க்கும் மேற்பட்ட கிராமங்களின் குடிநீர் பிரச்சனையை பூர்த்தி செய்யப்படும் என தெரிவித்து வந்த நிலையில் இன்று அதற்கான பணியை துவங்கிய போது கீழக்குடிகாடு மற்றும் அதனை சுற்றியுள்ள 5 கிராம மக்கள் சுமார் 500க்கும் மேற்பட்டோர் இணைந்து ஆழ்குழாய் அமைக்கும் பணியை தடுத்தனர்.

ஏற்கனவே ஆற்றில் கரும்பு சர்க்கரை ஆலைக்கு நீர் பயன்பாட்டுக்கு வேண்டி கிணறு அமைக்கப்பட்டு சுற்றுவட்டாரத்தில் உள்ள கிராம மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் மேலும் தற்போது அமைக்கப்படும் இந்த கிணறுகளால் இப்பகுதியில் நீர்வளம் முற்றிலும் இல்லாமல் போகும் என சாலையில் அமர்ந்து இத்திட்டத்தை நிறுத்த வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து போரட்டம் நடைபெறும் இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். நீண்ட பேச்சு வார்த்தைக்கு பிறகு அதிகாரிகள் பணியை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாகவும், ஆழ்குழாய் அமைக்கும் கருவிகளையும் அகற்றியதாலும் போராட்டக்காரர்கள் கலைந்து சென்றனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!