பெரம்பலூரில் நாளை மறு நாள் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
தமிழ்நாடு மாநில ஊரக, நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் மற்றும்பெரம்பலூர் கிறிஸ்டியன் கல்வியியல் நிறுவனங்கள் இணைந்து நடத்தும் தனியார்துறை வேலை வாய்ப்பு முகாம் 23.04.2022 (சனிக்கிழமை) அன்று காலை 09.00 மணி முதல் மாலை 3.00 மணி வரை பெரம்பலூர் மாவட்டம் கிறிஸ்டியன் கல்வியியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற உள்ளது.
மேற்படி வேலை வாய்ப்பு முகாமில் பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 8-ம் வகுப்பு தேர்ச்சி, 10-ஆம் வகுப்பு, 12-ஆம் வகுப்பு கலை, அறிவியல், ஐ.டி.ஐ, டிப்ளமோ பொறியியல் படித்துள்ள 18 வயதுக்கு மேல் 45 வயதுக்குள் உள்ள வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் (இருபாலர்) கலந்து கொண்டு பயன்பெறலாம்.
இம்முகாமில் 100க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு 2,500-க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகளை இளைஞர்களுக்கு வழங்கப்பட உள்ளனர். எனவே விருப்பமுள்ளவர்கள் தங்களின் பாஸ்போர்ட் அளவு புகைப்படம், கல்விச் சான்றிதழ்கள், ஆதார் அட்டை மற்றும் சுய குறிப்பு ஆகியவற்றின் அசல் மற்றும் நகலுடன் கலந்துகொள்ளவேண்டும்.
மேலும் விபரங்களுக்கு 04328-225362 என்ற தொலைபேசி எண்ணிலும், 9444094325 என்ற அலைபேசி எண்ணிலும் தொடர்புகொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் ப. ஸ்ரீ வெங்கடபிரியா தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu