பெரம்பலூர் மாவட்டத்தில் ஆயுத பட்டறைகளில் போலீசார் திடீர் ஆய்வு

பெரம்பலூர் மாவட்டத்தில் ஆயுத பட்டறைகளில் போலீசார் திடீர் ஆய்வு
X

பெரம்பலூர் அருகே உள்ள மங்களமேடு பகுதிகளில் அரிவாள்,கத்தி போன்ற ஆயுதங்கள் தயாரிக்கும் பட்டறையை போலீசார் ஆய்வு செய்தனர்.

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஆயுதம் தயாரிக்கும் பட்டறைகளில் போலீசார் திடீர் ஆய்வு நடத்தினர்.

பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணி உத்தரவின்பேரில் மங்களமேடு உட்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர் சந்தியா ,தலைமையில் மங்களமேடு உட்கோட்டத்தில் உள்ள மங்களமேடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அகரம்சீகூர் பகுதியில் கத்தி, அரிவாள் போன்ற ஆயுதங்கள் செய்யும் ஆயுத பட்டறையை ஆய்வு செய்யும் பணி நடந்தது.

மங்களமேடு காவல் நிலைய உதவி ஆய்வாளர் செந்தமிழ் செல்வி,ஆயுதங்கள் சரியான முறையில் தயாரிக்கப்படுகின்றதா? ஆயுதங்கள் வாங்கி செல்லும் நபர்களின் தகவல் சேகரிக்கப்படுகின்றதா, என்றும் குற்றவாளிகளாக கருதப்படும் நபர்களுக்கு ஆயுதங்கள் விற்கப்படுகின்றதா? என்றும் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டார். சட்டப்படி குற்றவாளிகளுக்கு ஆயுதங்கள் விற்றாலோ, தயாரித்து கொடுத்தாலோ அவர்கள்மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.

Tags

Next Story
நீதிமன்றம் உத்தரவிட்டது பாதிக்கப்பட்டவருக்கு அதிகபட்ச இழப்பீடு வழங்க உத்தரவு..!