பெரம்பலூர் மாவட்டத்தில் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு போலீசார் அறிவுரை
பெரம்பலூர் மாவட்டத்தில் ஆட்டோ டிரைவர்களுக்கு போலீசார் அறிவுரை வழங்கினர்.
பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணி உத்தரவின்பேரில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆட்டோ ஓட்டுநர்களையும் நேரில் சந்தித்து கலந்தாய்வு கூட்டம் நடத்தப்பட்டது.
இந்த கலந்தாய்வு கூட்டத்தில் பங்கேற்ற போலீஸ் அதிகாரிகள் ஆட்டோ ஓட்டுநர்கள் தங்களது ஆட்டோவில் பயணிகள் யாரையும் ஏதேனும் ஆயுதம் வைத்துக்கொண்டு வாகனத்தில் பயணம் செய்ய அனுமதிக்க கூடாது, ஆட்டோவில் பயணம் செய்யும் போது ஏதேனும் குற்ற சம்பவங்கள் குறித்து பேசி வந்தார்கள் என்றால் அதனை சம்பந்தப்பட்ட காவல் நிலைய ஆய்வாளர் அல்லது உதவி ஆய்வாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்,மேலும் தாங்கள் பயணம் செய்யும் சாலையில் யாரேனும் ஆயுதங்களுடன் கூட்டமாக நின்று பேசிக் கொண்டிருந்தார்கள் என்றால் அவர்களது விபரத்தினையும் அருகிலுள்ள காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும், அவ்வாறு தாங்கள் கூறும் தகவல் ரகசியம் காக்கப்படும் என கூறினார்கள்.
இந்த கலந்தாய்வு கூட்டம் பெரம்பலூர் உட்கோட்டத்தில் உள்ள ஓட்டுநர்களுக்கு பெரம்பலூர் உட்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர் சஞ்சிவ்குமார் தலைமையிலும், மங்களமேடு உட்கோட்டத்தில் உள்ள ஓட்டுநர்களுக்கு மங்களமேடு உட்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர் சந்தியா தலைமையிலும் நடை பெற்றது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu