பெரம்பலூர்: கொட்டரை கிராமத்தில் இறந்து பிறக்கும் கன்று குட்டிகள்!

பெரம்பலூர்: கொட்டரை கிராமத்தில் இறந்து பிறக்கும் கன்று குட்டிகள்!
X

குறை மாதத்தில் இறந்து பிறந்த கன்றுக்குட்டி.

பெரம்பலூர் மாவட்டம் கொட்டரை கிராமத்தில் தொடர்சியாக கன்றுக்குட்டிகள் இறந்து பிறப்பதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தாலுக்காவில் உள்ள கொட்டரை கிராமத்தில் வசித்து வரும் பவுனாம்பாள் என்பவருக்கு சொந்தமான பசு மாடு கன்று ஈன்றது. புதிதாக பிறந்த அந்த கன்று இறந்த நிலையில் வெளிவந்ததாகவும் கன்று வெறும் 8 மாதங்களே வளர்ச்சி பெற்றுள்ளதாகவும் தெரிவந்தது.

கடந்த 2 மாதங்களுக்கு முன்பாக பெரியம்மாள் மற்றும் வினோதா ஆகியோரின் பசுக்களும் கன்று ஈன்ற போது இதே போல் முழு வளர்ச்சி பெறாமல் இறந்த நிலையில் வெளிவந்ததாக தெரியவந்தது.

சந்தேகம் அடைந்த அப்பகுதி கிராமத்தினர் மாடுகளுக்கு செலுத்தப்பட்ட சினை ஊசியில் ஏதேனும் குறைபாடா அல்லது வேறு ஏதேதும் மாடுகளுக்கு குறையா என அப்பகுதி கால்நடை மருத்துவரிடம் கேட்ட போது, தற்போதுள்ள வெயிலின் காரணமாக கூட இது போன்று நிகழும் என தெரிவித்தாக கிராம மக்கள் கூறினார்கள்.

தொடர்ந்து 3 மாதங்களில் அதே பகுதியில் உள்ள பசுக்கள் ஈன்ற கன்றுகள் இப்படி மர்மமாக இறந்து பிறப்பதால் அப்பகுதி கிராம மக்கள் ஒருவித அச்சத்தோடே காணப்படுகின்றனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!