பெரம்பலூர் அருகே வீட்டு பூட்டை உடைத்து 35 சவரன் நகை திருட்டு

பெரம்பலூர் அருகே லெப்பைக்குடிகாட்டில், வீட்டின் பூட்டை உடைத்து, பீரோவில் இருந்த 35 சவரன் நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தாலுக்காவிற்கு உட்பட்ட லெப்பைக்குடிக்காடு பகுதி, ஜமாலியா நகரில் வசித்து வரும் அப்துல்லா . இவர் நேற்று, வீட்டை பூட்டி விட்டு தனது குடும்பத்தினருடன் திருச்சிக்கு சென்றுள்ளார். இரவு 1O மணியளவில் வீடு திரும்பி வந்தனர்.

அப்போது, வீட்டின் பூட்டு மற்றும் ஜன்னல் கம்பிகள் உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மேலும் வீட்டின் பீரோவில் வைக்கப்பட்டிருந்த 35 சவரன் தங்க நகைகள் திருடு போயிருந்தது தெரிய வந்தது. இதையடுத்து, இச்சம்பவம் தொடர்பாக மங்களமேடு காவல் நிலையத்தில், அப்துல்லா புகார் அளித்தார்.

தகவல் அறிந்த போலீசார், வீட்டில் ஆய்வு மேற்கொண்டனர். கைரே கை நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. குற்றவாளிகளை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். இச்சம்பவம், குன்னம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!