பெரம்பலூர் அருகே 4 குழந்தைகளின் தந்தை பாம்பு கடித்து உயிரிழப்பு
பாம்பு கடித்து இறந்த தமிழரசன்.
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டம் தெரணி கிராமத்தை சேர்ந்த தமிழரசன் (வயது 40) இவருக்கு திருமணமாகி ராஜேஸ்வரி (வயது30) என்ற மணைவியும்சுகன்யா(வயது16),செந்தமிழ்செல்வி(வயது15),ரம்யா(வயது-13) மணிசர்மா(வயது8) என்ற நான்கு பிள்ளைகள் உள்ளனர்.
இவர் இதே ஊரில் விவசாயம் செய்து வருகிறார். இவர் நேற்று காலை தன் வயலில் உள்ள கடலை செடிகளுக்கு நீர் பாய்ச்சி கொண்டு இருக்கும் போது விரியன் வகையை சேர்ந்த பாம்பு அவரை கடித்துள்ளது. இதனால் தலைசுற்றல் ஏற்பட்டு 1கிலோ மீட்டர் தூரம் நடந்து வீட்டுக்கு தகவல் தெரிவித்து விட்டு மயங்கியுள்ளார். வீட்டில் உள்ளவர்கள் அருகில் உள்ள காரை அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு சென்றுள்ளனர்.
அங்கு சிகிச்சை அளிக்க முடியாமல் பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உடல் முழுவதும் விஷம் பரவி அவர் மரணமடைந்தார். இந்த சம்பம் தெரணி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu