பெரம்பலூர் அருகே புள்ளிமான் பலி

பெரம்பலூர் அருகே புள்ளிமான் பலி
X

பெரம்பலூர் அருகே நாய்களால் கடித்ததில் படுகாயம் அடைந்த பெண் புள்ளிமான்பலி

பெரம்பலூர் அருகே நாய்களால் கடித்ததில் படுகாயம் அடைந்த பெண் புள்ளிமான்பலி

பெரம்பலூர் மாவட்டம், வேப்பூர் தாலுக்கா பகுதியில் வனத்துறைக்கு சொந்தமான அரசு காப்பு காடுகள் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் உள்ளது. இதில் மான்கள் அதிகளவில் வசித்து வருகின்றன. இந்நிலையில் தற்போது வனப்பகுதியில் மான்களுக்கு தேவையான தண்ணீர் கிடைக்காததால் வனப்பகுதியை விட்டு பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு மான்கள் வருகிறது.

பெரம்பலூர்- வேப்பூர் பேருந்து நிலையத்திற்கு பின்புறம் 1 வயது மதிக்கத்தக்க பெண் புள்ளிமான் ஒன்று தெரு நாய்களால் கடித்ததில் படுகாயம் அடைந்தது. இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வருவதற்கு முன் மான் இறந்துவிட்டது. மானை மீட்டு கால்நடை உதவி மருத்துவர் உதவியுடன் பிரேத பரிசோதனை செய்தனர். பின்னர் அந்த மானை அரசு காப்பு காட்டில் புதைத்தனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!