பெரம்பலூர், வி.களத்தூரில் கொரோனா பேரிடர் உதவி மையம் திறப்பு

பெரம்பலூர் மாவட்டம் வி.களத்தூரில் கொரோனா பேரிடர் உதவி மையம் திறக்கப்பட்டது.

HIGHLIGHTS

பெரம்பலூர், வி.களத்தூரில் கொரோனா பேரிடர் உதவி மையம் திறப்பு
X

பெரம்பலுர் மாவட்டம் வி.களத்தூரில் திறக்கப்பட்டுள்ள கொரோனா பேரிடர் மையம் 

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வி.களத்தூர் நகரத்தின் சார்பாக இன்று கொரோனா பேரிடர் உதவி மையம் (Corona Relief Centre) பெரிய கடை வீதியில் திறக்கப்பட்டது.

கொரோனா நோய்த்தொற்று பொதுமக்களை மிகவும் சிரமத்திற்கு ஆளாக்கி உள்ளது. முறையான வழிகாட்டுதல் கிடைக்காமலும், போதிய விழிப்புணர்வு இல்லாமலும் பொதுமக்களில் பலர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா பொதுமக்களின் தேவைகளை கருதி கொரோனா பேரிடர் மையத்தை மாநிலத்தின் பல பகுதிகளில் துவங்கியுள்ளது.

அதன் ஒரு பகுதியாக பெரம்பலூர் மாவட்டம், வி.களத்தூரில் துவங்கப்பட்ட கொரோனா உதவி மையத்தின் பொறுப்பாளர் அப்துல் ரஹீம் தலைமை தாங்கி வழிநடத்தினார். அதனை தொடர்ந்து ஜமாத் தலைவர் ரபியுதீன் திறந்து வைத்தார். சித்த மருத்துவர் தாமரைக்கண்ணன், பல் மருத்துவர் முஹம்மது இப்ராஹிம் ஆகியோர் கலந்துகொண்டு பேசினார்கள். மேலும் இந்நிகழ்வில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நகரத் தலைவர் முஹம்மது இக்பால், நகர செயலாளர் சவுகத் அலி, SDPI கட்சியின் பெரம்பலூர் மாவட்ட துணைத் தலைவர் முஹம்மது பாரூக், வி.களத்தூர் நகர செயலாளர் சித்திக் பாஷா, பாப்புலர் ஃப்ரண்ட் தன்னார்வலர்கள் மற்றும் ஜமாத் துணைத்தலைவர் முஹம்மது ரபீக் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இங்கு நோய்ப்பரவலை கட்டுப்படுத்த விழிப்புணர்வு, ஆம்புலன்ஸ் ஏற்பாடு, கொரோனா நோயினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மன நல ஆலோசனைகள், மருத்துவமனை சம்பந்தபட்ட வழிகாட்டல், ஆக்சிஜன் Pulse பரிசோதனை செய்தல், கபசுரக் குடிநீர், வைட்டமின் மாத்திரைகள் இம்மையத்தின் மூலம் வழங்கப்படுகிறது.

மேலும் கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக சிகிச்சை பலனின்றி உயிரிழக்கும் அனைத்து மக்களையும் கண்ணியமான முறையில் அடக்கம் செய்வதற்கு தனியாக குழுக்கள் அமைக்கப்பட்டு மக்கள் தொடர்பு கொள்ள உதவி எண்களாக 95664 38163, 95972 41603 அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 26 May 2021 9:30 AM GMT

Related News