/* */

நீட்டால் உயிரிழந்த அனிதாவின் சகோதரர் தேர்தலில் போட்டி

நீட்டால் உயிரிழந்த அனிதாவின் சகோதரர் தேர்தலில் போட்டி
X

நீட் தேர்வு பிரச்சனையில் உயிரிழந்த அனிதாவின் சகோதரர் பெரம்பலுார் மாவட்டம் குன்னம் தொகுதில் போட்டியிடுகிறார்.

வரும் ஏப்.06 ஆம் தேதி நடைபெற உள்ள தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி அனைத்து கட்சியினரும் வேட்பு மனுவை தாக்கல் செய்ய ஆர்வமாக இருந்து வருகின்றனர்.தமிழகத்தில் பெரும்பாலான நகரங்களில் வேட்பாளர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகுதிகளுக்கான வேட்பு மனுவினை தாக்கல் செய்து வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக இன்று குன்னத்தில் உள்ள வட்டாட்சியர் அலுவலகத்தில் வேட்பாளர்கள் பாதுகாப்பாக வேட்பு மனு தாக்கல் செய்யும் வகையில் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதில் பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் வேட்பாளர் பாண்டியன் குன்னம் வட்டாட்சியர் கிருஷ்ணராஜிடம் வேட்பு மனுவை வழங்கினார். இவர் நீட் தேர்வால் உயிரிழந்த அனிதாவின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.

Updated On: 19 March 2021 4:56 AM GMT

Related News