செட்டிகுளம் ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் குபேர ஹோமம்: திரளான பக்தர்கள் தரிசனம்
செட்டிகுளம் அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோவிலில் 2 ஆண்டுகளுக்கு பிறகு குபேர யாக வேள்வி நடைபெற்றது.
பிரசித்தி பெற்ற செட்டிகுளம் அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோவிலில் 2 ஆண்டுகளுக்கு பிறகு குபேர யாக வேள்வி நடைபெற்றது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம், செட்டிகுளத்தில் அமைந்துள்ளது அருள்மிகு காமாட்சி உடனுறை ஏகாம்பரேஸ்வரர் திருக்கோவில். இத்திருக்கோவிலில் சித்திரலேகா சமேத குபேர பெருமான் தனி சந்நிதியில் அருள்பாலிக்கிறார். ஒவ்வொரு மாதமும் பூரட்டாதி நட்சத்திரத்தில் குபேர யாக வேள்வி நடைபெறும். காெரோனா தொற்று பரவல் காரணமாக நடைபெறாமல் இருந்த குபேர யாக வேள்வி இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு இன்று நடைபெற்றது.
கணபதி ஹோமத்துடன் தொடங்கிய யாக வேள்வியில் பல்வேறு மூலிகைப் பொருட்கள் செலுத்தப்பட்டு மஹாபூர்னா ஹீதியும், தொடர்ந்து குபேர பெருமானுக்கு பால், தயிர், கலச தீர்த்தங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு மலர் அலங்காரத்தோடு மஹா தீபாரதனையும் நடைபெற்றது.
இந்த குபேர யாக வேள்வியில் செட்டிகுளம், நாட்டார்மங்கலம், கூத்தனூர், பாடாலூர், ஆலத்தூர்கேட், நாரணங்கலம், குரூர், பொம்மனப்பாடி, மாவலிங்கை உள்ளிட்ட சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த திராளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu