பெரம்பலூரில் "அறிவோம் மார்க்சியம்" தொடர் பயிற்சி வகுப்பு

பெரம்பலூரில் அறிவோம் மார்க்சியம் தொடர் பயிற்சி வகுப்பு
X

பெரம்பலூரில் அறிவோம் மார்க்சியம் எனும் தொடர் பயிற்சி வகுப்பு நடந்தது.

பெரம்பலூரில் அறிவோம் மார்க்சியம் எனும் தொடர் பயிற்சி வகுப்பு நடந்தது.

பெரம்பலூர் ரோவர் பள்ளி அருகே உள்ள லட்சுமி மருத்துவமனை கூட்டரங்கில் தீக்கதிர் வாசகர் வட்டத்தினர் சார்பில் "அறிவோம் மார்க்சியம்" எனும் தொடர் பயிற்சி வகுப்பு மார்ச் மாதம் முழுவதும் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் தொடர் பயிற்சி வகுப்பு காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. இன்று காலை தொடங்கிய பயிற்சி வகுப்பு நிகழ்விற்கு மக்களுக்கான மருத்துவர் கழகத்தின் மாநில செயலாளர் மருத்துவர் கருணாகரன் தலைமை வகித்தார். பகுத்தறிவாளர் கழகத்தின் மாவட்ட தலைவர் பெ.நடராஜன் வரவேற்றார். தமுகசவின் மாவட்ட செயலாளர் ப.செல்வகுமார் முன்னிலை வகித்தார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் கவிஞர் நந்தலாலா "ஏன் எதை எப்படி படிக்க வேண்டும்?"என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். இறுதியாக சிமிஜிஹி வின் மாவட்ட செயலாளர் அகஸ்டின் நன்றியுரையாற்றினார்.அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி உதவி பேராசிரியர் குமணன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!