நக்கசேலம் கிராமத்தில் பெரிய ஏரி நீர் நிரம்பியதால் கிடாவெட்டி சிறப்பு பூஜை

நக்கசேலம் கிராமத்தில் பெரிய ஏரி நீர் நிரம்பியதால் கிடாவெட்டி சிறப்பு பூஜை
X

நக்க சேலம் ஊராட்சிக்கு உட்பட்ட செல்லியம்மன் என்னும் பெரியஏரி நிரம்பியதால் அப்பகுதி மக்கள் கிடா வெட்டி சிறப்பு பூஜை செய்து வரவேற்றனர்.

நக்க சேலம் ஊராட்சிக்கு உட்பட்ட செல்லியம்மன் என்னும் பெரியஏரி நிரம்பியதால் கிடா வெட்டி சிறப்பு பூஜை செய்து வரவேற்றனர்.

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டம் நக்க சேலம் ஊராட்சிக்கு உட்பட்ட செல்லியம்மன் என்னும் பெரியஏரி கடந்த வாரம் வரை பெய்த மழையால் கடை ஓடியது.

கடை ஓடி வரும் நீரை நக்க சேலம் ஊராட்சி மன்ற தலைவர் மைதலிகணேசன் தலைமையில் ஊராட்சி செயலாளர் சுரேஷ் அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோர் கிடா வெட்டி சிறப்பு பூஜை செய்து வரவேற்றனர்.

நீண்ட காலத்திற்கு பிறகு இந்த ஏரியில் நீரை காண்பதில் மகிழ்ச்சி அடைவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!