கேரள மாநில செயலாளர் கொலையை கண்டித்து எஸ்.டி.பி.ஐ. கட்சி ஆர்ப்பாட்டம்

கேரள மாநில செயலாளர் கொலையை கண்டித்து எஸ்.டி.பி.ஐ. கட்சி ஆர்ப்பாட்டம்
X

பெரம்பலூரில் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கேரள மாநில செயலாளர் கொலையை கண்டித்து பெரம்பலூரில் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

எஸ்.டி.பி.ஐ. கட்சியின் கேரள மாநில மாநிலச் செயலாளர் கே .எஸ் .ஷான் கொலை செய்யப்பட்டு உள்ளார். இதனை கண்டித்தும், குற்றவாளிகளை உடனே கைது செய்ய வலியுறுத்தியும் பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் அருகில் கண்டன கோஷங்கள் எழுப்பி மாவட்ட தலைவர் முஹம்மது இக்பால் தலைமையில் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இதில் சிறப்பு அழைப்பாளராக பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் மாவட்ட தலைவர் அபுதாஹிர் , முன்னாள் மாவட்ட தலைவர் அபூபக்கர் சித்திக் ஆகியோர் முன்னிலையில் மாவட்ட பொதுச்செயலாளர் முகமது ரபிக், மாவட்ட துணைத் தலைவர் முகமது பாரூக் , மாவட்ட செயலாளர் முகமது இக்பால் ,மாவட்ட பொருளாளர் ஜியாவுதீன் அகமது மற்றும் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சாஜகான் முகம்மது இப்ராகிம் ,முகம்மது அலி தொகுதி செயலாளர் சித்திக் பாஷா ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!