பெரம்பலூர் கேந்திர வித்யாலயா, இசைப்பள்ளிகளில் கலெக்டர் ஆய்வு
பெரம்பலூர் கேந்திர வித்யாலயா பள்ளியில் ஆசிரியர்கள் வருகை பதிவேடுகளை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீ வெங்க பிரியா ஆய்வு செய்தார்.
பெரம்பலூர் மாவட்ட கேந்திர வித்யாலயா பள்ளியில், மாவட்ட ஆட்சியர் ஸ்ரீவெங்கட பிரியா நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பணியில் உள்ள ஆசிரியர்களின் எண்ணிக்கை மற்றும் மாணவர்களின் வருகை பதிவேடு, உட்கட்டமைப்பு வசதிகள், பள்ளி வளாகங்கள் மற்றும் வகுப்பறைகள் தூய்மையாக பராமரிக்கப்படும் விதங்கள், அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளின்படி, முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியினை பின்பற்றுதல், கைகளை தூய்மையாக வைத்துக் கொள்ளுதல் போன்ற நடவடிக்கைகள் குறித்து பள்ளியின் முதல்வரிடம் கேட்டறிந்தார்.
தொடர்ந்து அனைத்து நடவடிக்கைகளும் சரியான முறையில் பின்பற்றி வளர்ச்சிக்குத் தேவையான வழிமுறைகளை மேற்கொள்ளுமாறு பள்ளி முதல்வரிடம் அறிவுறுத்தினார்.
அதனைத்தொடர்ந்து, தமிழக அரசின் கலை பண்பாட்டுத்துறையின் கீழ் பெரம்பலூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அரசு இசைப்பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு குரலிசை, தேவாரம், பரதம், மிருதங்கம், வயலின், நாதஸ்வரம், தவில் உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்படுவதையும், விடுதியில் உள்ள ஆசிரியர்கள் வருகை, இசைப்பள்ளியின் உட்கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்டவற்றை மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் இப்பள்ளியில் மாணவர்களை அதிகளவில் சேர்த்து வளர்ச்சிக்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு இசைப்பள்ளி முதல்வரிடம் அறிவுறுத்தினார்.
நிகழ்வுகளில், கேந்திர வித்யாலயா பள்ளி முதல்வர் டாக்டர் வே. கல்யாணராமன், இசைப்பள்ளி முதல்வர் ஹேமா மற்றும் ஆசிரியர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu