பெரம்பலூர் மாவட்ட அளவில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு கலா உத்சவ் போட்டி

பெரம்பலூர் மாவட்ட அளவில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு கலா உத்சவ் போட்டி
X

பெரம்பலூர் மாவட்டத்தில் கலா உத்சவ் விளையாட்டு போட்டிகள் தொடக்க நிழா நடந்தது.

பெரம்பலூர் மாவட்ட அளவில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு கலா உத்சவ் விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது.

பெரம்பலூர் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அறிவழகன் வழிக்காட்டுதலின் பேரில், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி சார்பில் 2021-22 கல்வி ஆண்டிற்கான பள்ளி மாணவ-மாணவிகளுக்கு கலா உத்சவ் மாவட்ட அளவிலான போட்டிகள் நடைபெற்றது .

பெரம்பலூர் தந்தை ஹேன்ஸ் ரோவர் மேல்நிலைப்பள்ளியில் நடந்த கலா உத்சவ் போட்டிகளை கல்வி பெரம்பலூர் மாவட்ட அலுவலர்கள் சண்முகம், வேப்பூர் மாவட்ட கல்வி அலுவலர் ஜெகநாதன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

கலா உத்சவ் போட்டிகளில் 9 முதல் 12-ம் வகுப்பு பயிலும் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு தனித்தனியாக செவ்வியல், பராம்பரிய நாட்டுப்புற வகையில் வாய்ப்பாட்டு இசை, கருவி இசை, நடனம் ஆகிய போட்டிகளும், கோட்டு ஓவியம், வண்ண ஓவியம், அச்சு ஓவியம் ஆகியவற்றிலும், சிற்பத்திலும் காண்கலை போட்டிகளும், உள்ளூர் தொன்மை பொம்மைகள் தயாரிப்பு போட்டியும் நடைபெற்றது. இதில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். போட்டியில் முதல் 3 இடங்களை பிடிக்கும் மாணவ-மாணவிகள் மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ளவுள்ளனர்.

அதில் வெற்றி பெறும் மாணவ-மாணவிகள் தேசிய அளவில் தமிழக அணிக்காக கலந்து கொள்ளவுள்ளனர். முதல் பரிசாக ரூ.25 ஆயிரமும், 2-ம் பரிசாக ரூ.20 ஆயிரமும், 3-ம் பரிசாக ரூ.15 ஆயிரமும் மற்றும் கேடயம், பதக்கம், சான்றிதழ்கள் வழங்கப்படவுள்ளது. மாவட்ட அளவிலான போட்டிக்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியின் உதவி திட்ட அலுவலர் ராஜா, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் குமார் ஆகியோர் செய்திருந்தனர்.

Tags

Next Story