பெரம்பலூர் மாவட்டத்தில் ஜெயலலிதா பிறந்த நாள் விழா கொண்டாட்டம்

பெரம்பலூர் மாவட்டத்தில் ஜெயலலிதா பிறந்த நாள் விழா கொண்டாட்டம்
X

ஜெயலலிதா பிறந்த நாள் விழாவில் தையல் மெஷின் வழங்கப்பட்டது.

பெரம்பலூர் மாவட்டத்தில் ஜெயலலிதா பிறந்த நாள் விழா அதிமுகவினரால் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

தமிழக மறைந்த முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாள் விழா இன்று தமிழகம் முழுவதும் மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. அதனை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான ஆர். டி. ராமச்சந்திரன் தலைமையில் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள புரட்சித்தலைவி ஜெயலலிதா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

அதனைத் தொடர்ந்து அங்கு இருந்த முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர் ,அண்ணா ,பெரியார் ஆகியோரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பிறகு பெரம்பலூர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் ஏழை எளிய மக்களுக்கு தையல் மிஷின், வேஷ்டி சேலை தென்னங்கன்று உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது .அதனைத் தொடர்ந்து மாவட்ட வழக்கறிஞர் அணி சார்பாக கௌதம புத்தர் காது கேளாதோர் அறக்கட்டளையில் 100 மாணவ மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்பட்டது.

இதேபோல் பெரம்பலூர் மாவட்டத்தில் அனைத்து ஒன்றியங்களிலும் ஆயிரம் நபர்களுக்கு இலவச மதிய உணவு வழங்கப்பட்டது .இந் நிகழ்வில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தமிழ்ச்செல்வன் பெரம்பூர் நகர கழக செயலாளர் ராஜபூபதி ஒன்றிய கழக செயலாளர் செல்வகுமார் ,கர்ணன், சிவப்பிரகாசம், ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!